எந்த ஒரு தாவரமும் வளர வேண்டுமானால் ஏற்ற சூழல் மண்ணில் இருக்க வேண்டும். அதில் குறிப்பாக விதைகளை விதைத்தால் தீமை செய்கின்ற கிருமிகளை நாற்றழுகல், மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகள் உடனே விதையை தாக்கலாம். மேலும் விதையின் மேற்பரப்பில் கூட பல நோய்க்கிருமிகள் உயிருடன் இருக்கும். அந்த விதை முளைத்திட முயலும் போது அந்த விதையை அழிக்க தனது விஷ வினையியல் பணியால் முயற்சி செய்யும்.
குறிப்பாக மானாவாரியான சூழலில் வேர் அழுகல் அதிமாக பருத்தி, கடலை, உளுந்து, கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, சூரியகாந்தி மற்றும் எள் முதலிய பயிர்களை தாக்கும். நீர் உள்ள இடத்தில் மஞ்சள் மற்றும் தக்காளி, மிளகாய், கத்தரி முதலிய காய்கறிப் பயிர்களை நாற்றழுகல் நோய்க் கிருமிகள் தாக்கும். இந்த சேதம் வெகுவாக முளைப்பு திறனை குறைத்து பயிர் எண்ணிக்கை இல்லாது நஷ்டம் ஏற்பட வழி வகுக்கும். நாற்றுக்கள் மற்றும் விதைகளை பாதுகாப்பு கவசமாக ‘ஹெல்மெட்’ போட்டது போல உரிய ‘டிரைக்கோடர்மா விரிடி’ விதை நேர்த்தி எனும் உத்தி மூலம் பாதுகாக்கலாம்.
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் நன்மை செய்யும் டிரைக்கோடர்மா விரிடியை வாங்கி விதை நேர்த்தி செய்வது அவசியம். மேலும் ஒரு ஏக்கர் பரப்பிற்கு ஒரு கிலோ என்ற அளவில் இப்பூசணத்தை அனைத்து பயிர்களுக்கும் அருகில் மண்ணில் இடுவதன் மூலமாகவும் நிச்சயம் அதிக மகசூல் பெறலாம். நல்ல நீர், மண் வளம் இருந்தாலும் அங்கு இவற்றை பயன்படுத்துவது நல்லது. இது ஒரு இயற்கை வேளாண் முறையில் உயிரியல் உத்தியாகும். நன்மை செய்யும் உயிரினப் பெருக்கம் பல கோடி இருப்பின் செடிகள் பழுது இன்றி பல்கிப் பெருகும்.
நலமான செடி நிறைந்த மகசூலுக்கு வழி கோலும். இந்த டிரைக்கோடர்மா விரிடி எந்த பூசணக் கொல்லிகளுடன் கலக்கக் கூடாது.
உற்பத்தி செய்த நாளில் இருந்து 4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். வெயில் படாதவாறு குளிர்பதன சேமிப்பில் வெகுவாக காக்கப்படும். பயிருக்கு நன்மை செய்யும் இதர உயிர் உரங்களான ‘அசோஸ்பைரில்லம்’ ‘பாஸ்போ பேக்டீரியா’ மற்றும் ‘ரைசோபியம்’ ஆகியவற்றுடனும் கலந்து விதைக்கலாம். மண் வழியே பரவும் நோயை கட்டுப்படுத்தி டி.விரிடியை கட்டாயம் சேர்க்க வேண்டும்.
தொடர்புக்கு 9842007125 .
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்