விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள்!

தமிழக வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுகிறது. விதை ஆய்வாளர்களிடம் ஆலோசனை பெற்று விதைகள் வாங்கும்போது பயிர் உற்பத்தி லாபகரமாக இருக்கும். எனினும் விவசாயிகள் பலர் தரம் குறைந்த விதைகளை தனியாரிடம் வாங்கி ஏமாறக்கூடாது.

விதை கொள்முதல் விஷயத்தில் விவசாயிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கீழ்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

  • உரிமம் பெற்ற விதை விற்பனை யாளர்களிடம் மட்டும் விதைகள் வாங்க வேண்டும்.
  • வாங்கிய விதைக்குரிய விற்பனை பட்டியலை (ரசீது) கேட்டு வாங்கி பயிர் காலம் முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
  • விற்பனை பட்டியலில் குறிப்பிட்டுள்ள பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் போன்றவற்றை சரி பார்த்து வாங்கவும்.
  • விதை சிப்பத்தில் சான்றட்டை மற்றும் உற்பத்தியாளர் அட்டை கட்டுப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும்.
  • உண்மை நிலை விதை என்றால் அதில் விபர அட்டை உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். சான்று பெற்ற, பூச்சி நோய் தாக்குதலால் சேதம் அடையாத விதைகளை வாங்க வேண்டும்.
  • திறந்த நிலையில் உள்ள மூடை, பை இருப்புகளில் இருந்து விதைகள் வாங்க வேண்டாம்.
  • காலாவதி தினத்திற்குள் விதைக்க வேண்டும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்களை பயிர் செய்யும்போது விதை சிப்பங்களை தனித்தனியாக ஊற வைக்க வேண்டும்.

இளங்கோ,
விதை ஆய்வு துணை இயக்குனர்,
மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *