வறட்சி நிலவும் ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கு உலை வைக்கும், கருவேல முள்மரம், செடிகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக தொடர்மழை பெய்யவில்லை. இதனால் கண்மாய், கோடை கால நீர்தேக்கம் போன்றவற்றில் தண்ணீர் இல்லை.
விவசாயம் மற்றும் குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். தென்னை விவசாயிகள் மாற்றுபயிர்களை நம்பி, காலம் தள்ளுகின்றனர். நகராட்சி பகுதிகளில் 21 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை நடக்கிறது.
குடிநீர் தேக்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆழ்துளைகிணறு அமைத்து, இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் மற்றும் தனியார் கிணறுகளில் வாங்கப்படும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
ராஜபாளையத்தின் தற்போதைய வறட்சிக்கு காரணமே, சுற்றுச்சூழலை பாதுகாக்காதது தான் என இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழை பெய்யவில்லை. அதே வேளை நிலத்தடி நீர் மட்டம் குறைந்து 600 முதல் 800 அடிக்கு கீழே சென்றுவிட்டது. வரும்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், “ராஜபாளையத்தை சுற்றி கருவேல முள்மரங்கள், கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் வளர்ந்து வந்தன. தற்போது விவசாயம் நடைபெறாத நிலங்களிலும் இவை பரவிவிட்டன.
- இந்த மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், நிலத்தில் தண்ணீர் கிடைக்காதபோது, காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி சுற்றுப்புறத்தை வெப்பமாக்கும் தன்மை உடையது.
- இதனால் மழை பெய்யும் கருமேங்கள் சூழ்ந்தாலும், குளிர்காற்று இல்லாததால், மேகங்கள் வேறுபக்கம் செல்கிறது.
- கருவேல முள்மரங்கள் மற்றும் செடிகள் சுற்றுபுறத்தை வெப்பமாக்கி, மழையை தடுக்கிறது.
- மரம் வளர்ப்பு ஒருபுறம் நடந்தாலும், நச்சுத்தன்மை உள்ள கருவேல முள்மரங்களை அகற்றும் பணியையும் உடனே துவக்கவேண்டும்.
- இதற்கான நிதியை உடனே ஒதுக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, திட்டமிட்டு கருவேல முள்மரங்களை அகற்ற பயன்படுத்தவேண்டும்,”என்றனர்.
கருவேல மரங்களை பற்றி இங்கேயும், இங்கேயும் படித்து தெரிந்து கொள்ளலாம்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்