மாடி தோட்டத்தில் நெல் சாகுபடி!!

வீட்டு மாடி தோட்டத்தில் காய்கறி கீரைகள் வளர்ப்பு பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். நெல் சாகுபடி செய்வது கேள்வி பட்டு இருக்கீர்களா?

திருவனந்தபுரத்தில் வாழும் திரு ரவீந்திரன் இதையே செய்து சாதித்து உள்ளார். அவரின் சாதாரண வீட்டில் வீட்டு தோட்டம் மட்டும் இலாமல் மாடியிலே நெல் வளர்க்கிறார்.

இதற்கு 300 சதுர அடி மாடி பயன் படுத்தி உள்ளார். மாடியில் உள்ள சட்டிகள் அதிகம் பாரம் இருக்காமல் இருக்கவும், நீர் சேராமல் இருக்கவும் மாடியில் இருந்து கம்பிகள் மூலம் சப்போர்ட் கொடுத்து உள்ளார்.

?

150 மண் சட்டிகளில் நெல் பயிர் வளர்கிறது. அவருக்கு இதன் மூலம் 32 கிலோ கிடைக்கிறது . வருடம் 3 தடவை சாகுபடி செய்கின்றார். அதிகம் நீர் தேவை இல்லை என்கிறார் இவர். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நீர் விடுகிறார். நீர் ஆவி ஆகாமல் இருக்க அசோலா பயன் படுத்துகிறார். இவர் சாகுபடி செய்துள்ள ரகங்கள் – பிரதியுஷா மற்றும் உமா

இவர் அரசாங்கத்திடம் இருந்தும் பல தனியார் நிறுவனங்கள் இருந்தும் மாடி தோட்ட அவ்ர்டுகள் பெற்றுள்ளார்!

நன்றி: Krishijagran

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *