கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, காய்கறிகள் துறை தலைவர் மற்றும் பேராசிரியர், ஆறுமுகம் கூறுகிறார்:
தனி வீடுகளில் இருப்போர், ஓரளவு மண், சூரிய ஒளிபடும் நிலப்பகுதி வீட்டில் இருந்தால், கண்டிப்பாக முருங்கை, பப்பாளி, எலுமிச்சை, மா போன்ற, ‘பெரினியல்’ மரங்களை, அதாவது, நீண்ட காலம் பயன் தரக்கூடியவற்றை வளர்க்கலாம். மூலிகைச் செடிகளான துளசி, கற்பூரவல்லி, துாதுவளை வளர்க்க எளிது.
மாடித் தோட்டம், இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. கட்டடம் கட்டும்போதே மேற்கூரையில் நீர் இறங்காதபடி, தோட்டம் போட ஏதுவாக, தரையை, ‘லேமினேட்’ செய்யும் தொழில்நுட்பம் வந்து விட்டது. 3 – 5 ஆண்டு வரை, இதில் தண்ணீர் இறங்காது; ஒரு சதுர அடிக்கு, 6 – 7 ரூபாய் தான் செலவாகும்.
கோடை வெயிலில் செடிகள் வாடாமல் இருக்க, நிழல் வலைக் கூடாரம் அமைப்பது சிறந்த வழி. இதில், 35, 50, 70 சதவீதம் நிழல் என, பல விதங்களில் கிடைக்கிறது. மொட்டை மாடி காய்கறித் தோட்டத்துக்கு, 35 சதவீத நிழல் உகந்தது. இதன் வழியாக வரும், ‘டிப்யூஸ்ட்’ ஒளி, நல்ல பலனைத் தரும்.தொட்டி தவிர, பெரிய பாலித்தீன் பைகளிலும் செடிகளை வளர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தேங்காய் நார் கட்டிகள் பயன்படுத்தினால், எடை இல்லாமல் லேசாக இருப்பதுடன், மண் போட்ட அதே பலனும் கிடைக்கும்.
செடிகளுக்கு, உயிர் உரங்கள் எனப்படும், ‘பையோ பர்டிலைசர்’ போடலாம். ஆர்கானிக் உரம் தவிர, ‘காம்ப்ளக்ஸ்’ உரம் இடலாம். நர்சரிகளில் கிடைக்கும் மண்புழு உரமும் சிறந்தது. ரசாயன உரங்களான, யூரியா, டை அம்மோனியம் பாஸ்பேட் போடுவதாக இருந்தால், ஒரே ஒரு டீஸ்பூன் உரத்தை, நீரில் கரைத்து, 10 நாட்களுக்கு ஒருமுறை போட்டால் போதும்.மண் இருக்கும் ஒரு மூலையில் காய்கறி குப்பைகளைப் போட்டு வந்தால், ஆறு மாதத்தில் மக்கி, அருமையான இயற்கை உரம் கிடைக்கும்.
வீட்டுக்குள் அலங்கார தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதால், மனதிற்கும் இதம்; அவை வெளியிடும் ஆக்சிஜனும் கிடைக்கும். பூச்செடிகளுக்கு நல்ல வெயில் வேண்டும் என்பதால், அவை வீட்டுக்குள் அவ்வளவாக வளராது. நிழற்பநன்றி: தினமலர் , பில்லோடென்ட்ரான்ஸ் மரண்டா’ போன்றவற்றை, வீட்டுக்குள் வைக்கலாம். அவற்றையும் வாரம் ஒருமுறை வெயிலில், 5 – 6 மணி நேரம் வைத்து எடுக்க வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மொட்டை மாடி காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் , இதை யார் அமைத்து தருவார்கள்