- வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்புக்காக இனக்கவர்ச்சிப்பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காய் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேர்த்து அழித்து விட வேண்டும்.
- எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைகோ கிரமா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
- வேப்பம் கொட்டைப்பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
- சாம்பல் நிற வண்டை கட்டுப்படுத்த ப்யூரடான் குருணை மருந்து எக்டருக்கு 12 கிலோ இட வேண்டும்.
- நூற்புழு தாக்குதலைத் தடுக்க எக்டருக்கு 400 கிலோ வேப்பம் புண்ணாக்கு விதைக்கும் போது உரத்துடன் கலந்து இட வேண்டும். அல்லது 1 ஏக்கருக்கு நர்சர் 1 1/2 லிட்டர் + 1 லிட்டர் நீம் அசால் 1000 பிபிஎம். அசுவினிப் பூச்சியைக் கட்டுப்படுத்த லேன்சர் கோல்டு தெளிக்க வேண்டும்.
- வைரஸ் நச்சுயிரி நோயானது வெள்ளை ஈ என்ற பூச்சியால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த 2 மிலி வேம்பு எண்ணை மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்