பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையுள்ள பருவத்தில் தோட்டப் பயிரான வெண்டைக்காயைப் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.இந்தக் காயில் உள்ள வழுவழுப்புத் தன்மை எலும்புகளைச் சுற்றியுள்ள ஜவ்வு பசைக்கு சத்தை அளிக்கிறது. இந்த வெண்டைக்கு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும், பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் பயிரிடும் காலமாக உள்ளது.

விதையளவு:
- ஒரு ஹெக்டேர் நிலத்தில் வெண்டை பயிரிட 6 கிலோ வீரிய ரக விதை தேவைப்படுகிறது.
விதை நேர்த்தி:
- ஒரு கிலோ விதை நேர்த்தி செய்ய 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியம், 400 கிராம் அúஸாஸ்பைரில்லமும், பயன்படுத்த வேண்டும். பின்னர் அரிசிக் கஞ்சியுடன் விதை நேர்த்தி செய்து நிழலில் 20 நிமிடங்கள் உலர வைத்தப்பின் பயன்படுத்த வேணடும்.
- இடைவெளி, நடவு முறை: வெண்டையை 45 ல 45 மற்றும் 45 ல 30 என்ற இடைவெளியில் ரகத்துக்கு ஏற்றபடி இடைவெளியை விட வேண்டும். குழிக்கு ஒரு விதை வீதம் 1.2 செ.மீ. ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும்.
- நீர்ப்பாசனம், நீர்வழி உரமிடல்: வீரிய ஒட்டு ரக வெண்டைக்கு பருவக் காலம் முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட உர அளவான 200:100:100 கிலோ தழை, மணி, சாம்பல், சத்துகள் நீர்வழியாக உரமிட வேண்டும்.
- தினமும் சொட்டு நீர்ப்பாசன முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவையான அளவு நீரில் கரையும் உரத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சொட்டு நீர்ப் பாசனமாக உரத் தொட்டியின் மூலம் இடவேண்டும்.
பின்செய் நேர்த்தி:
- விதை ஊன்றிய 30-ஆம் நாளில் இருந்து 10 நாள்களுக்கு ஒரு முறை நீரில் கரையும் 19:19:19 உரத்தை 0.5 சதவீதம் அளவுக்கு தெளிக்க வேண்டும். 1 சதவீத யூரியாவுடன் 1 சதவீத மியூரேட் ஆஃப் பொட்டாஷை கலந்து 30, 45-ஆவது நாளில் தெளிக்க வேண்டும்.
களையெடுத்தல்:
- ப்ளோக்ளோரலின் ஒரு கிலோ அல்லது மெட்டாளாகுளோர். 0.75 கிலோ அளவு களைக் கொல்லியை விதை ஊன்றிய 3-ஆம் நாள் தெளிப்பதன் மூலம் களையைக் கட்டுப்படுத்தலாம்.
- மேலும் களைக் கொத்தி உதவியுடன் 30-ஆம் நாளில் ஒரு முறையும், அதற்கு மேல் களை உள்ள அளவைப் பொருத்தும் களை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்தி நன்கு வளர்ந்த முற்றாத காய்களை அறுவடை செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்