உலகம் வெப்பமயப்படுவதால் நடக்கும் விசித்திரமான நடப்புகள்

உலகம் வெப்பமயப்படுவதால் எத்தனையோ விசித்திரமான நடப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.

இவற்றில் ஒன்றை பார்ப்போமா?

சுவிற்சர்லாந்தில் 1966 ஆண்டில், இந்தியாவில் இருந்து லண்டன் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பிலைட் 101 ஐரோப்பாவில் மிக உயர்ந்த மலையான மவுண்ட் பிளாங்க் மீது இருட்டில் மோதியது. இதில் பயணம் செய்த எல்லாரும் இறந்தனர். பஸ்ஸோன்ஸ் என்ற பனி ஆறில் மோதிய இந்த விமானத்தின் பாகங்கள் கிடைக்க வில்லை. 4000+ மீட்டர் மேல் உள்ள இந்த இடத்தில சென்று தேடவும் அந்த இடம் வாகாக இல்லை


இப்போது 54 ஆண்டுகள் பின், மவுண்ட் பிளாங்க் மலையின் மீது உள்ள பனி உருக தொடங்கி உள்ளது. உலகம் வெப்பமயப்படுவதால் உண்டான இந்த விளைவால், விமானத்தின் பாகங்கள், கீழே உள்ள பனி உருகி ஓடும் ஆறுகளில் கிடைக்கின்றன.

மலையில் நொறுங்கிய ஏர் இந்தியா 101

 

La Cabane du Cerro என்ற ஊரில் உள்ள ஒருவருக்கு இந்த விமானத்தின் பெட்டி ஒன்று கிடைத்து உள்ளது. இதில் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணியாளர் கொண்டு சென்ற 1966 ஆண்டு செய்தி தாள் கிடைத்து உள்ளது. இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி அடைந்ததை விவரிக்கும் அந்த நாள் செய்தி தாள்!

அதே போல் இந்த இடத்தில் ஏர் இந்தியாவின் மற்ற பெட்டிகள் கிடைத்து வருகின்றன. 2017 இல் 75 ஆண்டுகள் முன் காணாமல் போன இருவரின் உடல்கள் கிடைத்தன!

ஆல்ப்ஸ் மலை தொடரில் உள்ள மவுண்ட் பிளாங் 25% பனியை இழந்து விட்டதே இதற்கு காரணம்

நன்றி:  Guardian


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *