தரிசுக்காட்டை பசுமைக்காடாக்கி சாதனை: நிழற்குடிலில் வெள்ளரி

என்பதற்கு ஏற்ப கண்ணுக்கு எட்டிய துாரம் வரை கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கும் வறண்ட தரிசுக்காடு. கருவேல முள் செடிகளை தவிர வேறொன்றும் விளையாது என்ற நிலையில் ஏராளமானோர் தங்களின் நிலத்தை உழுது பயிரிட விரும்பாமல் விட்டு விட்டனர்.

வறட்சியான மாவட்டமாக ராமநாதபுரம் கருதப்பட்டாலும், மதுரையில் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமம் வறட்சியான பகுதியாக இன்றளவும் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த விவசாயி அலெக்ஸ்சாண்டர். இவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் தரிசுக்காடு கரிசல்பட்டியில் உள்ளது. போர்வெல் (ஆழ்துளை கிணறு) அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தார்.

மண் வளம் பெற இயற்கை உரங்களை பயன்படுத்தினார். தென்னை, எலுமிச்சை கன்றுகளை நடவு செய்து பெற்ற குழந்தையை போல் பராமரித்தார். விளைவு கரிசல்காட்டில் தென்னை, எலுமிச்சை தோப்புகள் மிடுக்காகவும், குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளிக்கிறது.

அடுத்ததாக 90 அடி அகலம் மற்றும் 200 அடி நீளத்தில் ‘பசுமை நிழற் குடில்’ அமைத்தார். மொத்தம் 18 லட்சம் ரூபாய் செலவானது. தோட்டக்கலைத்துறை 9 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது. பசுமை நிழற் குடிலில் இயற்கையான உரம் இட்டு உயர் வீரிய ஒட்டு ரகமான ‘மல்டி ஸ்டார்’ எனும் வெள்ளரி விதைகளை ஓசூரில் இருந்து வாங்கி பசுமை நிழற் குடிலில் நடவு செய்தார். கை மேல் பலன் கிடைத்தது.

அலெக்ஸ்சாண்டர் கூறியதாவது:

  • மல்டி ஸ்டார் விதை 100 கிராம் 1,250 ரூபாய். 40வது நாளில் இருந்து காய்கள் கிடைக்கும். 1
  • 40 நாட்கள் வரை தொடர்ந்து காய்கள் பறிக்கலாம். மொத்தம் 160 டன் வரை காய்கள் கிடைக்கும்.
  • ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் அனுப்புகிறேன்.
  • கிலோ 40 ரூபாய் வரை விலை போகிறது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
  • ஸ்டார் ஓட்டல்கள், பார்களில் வெஜிடபிள் சாலட் தயாரிக்க வெள்ளரி பயன்படுகிறது. இக்காய்களில் 80 சதவிகிதம் தண்ணீர் சத்தும், 20 சதவிகிதம் நுண்ணுாட்ட சத்துக்களும் பொதிந்துள்ளன.
  • பசுமை நிழற் குடிலில் விளைவிக்கும் பயிர்களுக்கு தண்ணீர் குறைந்தளவு போதும். இயற்கை உரம் கொடுத்து வந்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
  • நல்ல லாபம் கிடைக்கும். மழை, வெயில் பாராமல் மண்ணோடு மண்ணாக மாடு போல் உழைத்தால் வெற்றி உறுதி. எனது உழைப்பின் பின்னணியில் மனைவி மரியசெல்வி உள்ளார்.
  • அவரின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்பால் உயர்ந்துள்ளோம் என்பதில் பெருமைபடுகிறோம், என்றார்.

தொடர்புக்கு 9566762010 .

– கா.சுப்பிரமணியன், மதுரை.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *