இயந்திர நடவுக்கு மாறிய விவசாயிகள்

அரசின் முக்கிய திட்டமான 100 நாள் வேலை திட்டம் முதலில் வறட்சி அதிகமான மாவட்டங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்க ஆரம்பிக்க பட்டது. காலாவட்டத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த திட்டம் வந்த பின் விவசாயத்திற்கு வேலை செய்ய முன்வருவோர் குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் இயந்திரமயமாக மாறி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில்  மேல் நாடு விவசாயத்தில் பயன் படுத்தப்படும் harvester combine போன்ற இயந்திரங்கள் கூட வந்து விட்டன.. இதோ இந்த போக்கை பற்றிய தினமலரில் வந்த செய்தி…

நெல் நடவுப் பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள், இயந்திர நடவுக்கு மாறியுள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றிய பகுதியில், பகுதிவாசிகள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது, விவசாய நடவுப்பணிக்கு ஆட்கள் கிடைக்காததால், இயந்திர நடவுப் பணிக்கு மாறி வருகின்றனர். இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

  • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் வந்தது முதல், வயல்களில் நெல் நடவுப் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், நாங்கள் இயந்திர நடவுப் பணிக்கு மாறியுள்ளோம்.
  • மேலும், ‘இயந்திரம், மூலம், நெல் நடவுக்கு தேவையான நாற்றங்கால், சரியான விதை தேர்வு செய்யப்பட்டு, விதை நேர்த்தி செய்து, இயந்திரம் மூலம் டிரேயில் விதைக்கப்படுகிறது.
  • பின் வயலுக்கு தேவையான அளவு நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, இயந்திரம் மூலம் நடவு செய்யப்படுகிறது.
  • அதன் மூலம் ஆட்கள் செலவு குறைவதுடன், குறைந்த வயது மற்றும் வளமான நாற்றுகள், குறித்த நேரத்தில் நடவு செய்வதன் மூலம் கூடுதல் மகசூல் பெற முடியும்.
  • இயந்திரம் மூலம் ஒரு ஏக்கர் நடவு செய்ய, 5,500 முதல், 6,000 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
  • இதனால், கூலி ஆட்களை கொண்டு பணி செய்வதை காட்டிலும், எங்களுக்கு பணி சுலபமாக முடிந்து விடுகிறது. இதனால், நாங்கள் அனைத்து பணிகளுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம்இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *