இயற்கை முறையில் களைக்கொல்லி

கேரளாவில் ஒரு எளிமையான விவசாயி நரேந்திரநாத் என்பவர் அறிமுகப் படுத்தியுள்ளார்.

 • இக்கலவை களைகளைக் கொல்லும் எந்தப்பயிரிலும் இதைத்தெளித்தால் கருகிப்போகும். ஆனால் இது பயிர்களுடன் வளரும்.
 • செடிகள் மண்டிக் கிடக்கும் ஒரு நிலத்தை சுத்தம் செய்து அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைவரும் போது இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம்.
 • சுமார் ஒரு ஏக்கரில் இதனை பயன்படுத்த வேண்டுமானால் 250 லிட்டர் கரைசல் தேவைப்படும்.

10 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்.

 • சுண்ணாம்பு – 3 கிலோ,
 • கோமியம் – 3 லிட்டர்
 •  தண்ணீர் – 10 லிட்டர்,
 • வேப்ப எண்ணெய் – 2 லிட்டர்
 • உப்பு – 4 கிலோ

செய்முறை: 

 • தண்ணீரில் சுண்ணாம்பைச் சேர்த்து கலக்கி 10 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.
 • இதிலிருந்து 7 லிட்டர் எடுத்து அத்துடன் உப்பைக் கரைத்தும், அத்துடன் கோமியத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.
 • பின் இந்த கரைசலை வடிகட்டி எடுத்து அத்துடன் வேப்ப எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.
 • இதனை சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கும் போது மேலே மிதந்து வரும். படிமத்தை நீக்கி விட வேண்டும்.
 • பின் இந்தக் கரைசலை ஸ்பிரேயர் மூலமாக களைச்செடிகளின் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் விழுமாறு தெளிக்க வேண்டும்.
 • இக்கரைசலை தெளித்தப்பின் குறைந்தது 2 நாட்களுக்கு மழைவிழக் கூடாது.
 • இக்கரைசலை தெளிக்கும் முன் குறிப்பிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கவும் கூடாது.

மேலும் விபரங்களுக்கு நரேந்திரநாத்தை தொடர்பு கொள்ள 09847774725, 09847774725 கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தவும்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை முறையில் களைக்கொல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *