தென்னை மரத்திற்கு இன்சூரன்ஸ் திட்டம் – விவரங்கள்

தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மீளலாம்.தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து விவசாயிகளுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.

திட்ட விவரங்கள்:

  • தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வயல் வரப்புகளில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ தென்னை நடவு செய்திருந்தால் காப்பீடு செய்யலாம்.
  • குறைந்தபட்சம் 10 பலன் தரும் மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.
  • காப்பீட்டு தொகை மற்றும் பிரிமியம் செய்த நான்காவது ஆண்டில் இருந்து 15வது ஆண்டு வரையுள்ள மரங்கள் மற்றும் 16வது ஆண்டில் இருந்து 60ம் ஆண்டு வரையுள்ள மரங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தி காப்பீடு செய்ய வேண்டும்.
  • பிரிமிய தொகையில் 50 சதவீதம் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும் மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரிமியம் மட்டும் வசூலிக்கப்படும்.
  • எந்த தேதியில் பிரிமியம் செலுத்தப்படுகிறதோ, அன்றில் இருந்து ஒரு ஆண்டுக்கு பாலிசி வழங்கப்படும். ஆண்டு தோறும் பிரிமியம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம்.
  • பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பின் 45 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி வழங்கும்.
  • இந்த திட்டம் பற்றிய விபரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேரிலோ, 09943737557,   094438 21170 மற்றும் 09486685369 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

முழு விவரங்களுக்கு: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *