நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி?

ஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காண படுகிறது. இந்த செடி வந்துவிட்டால், ஏரி முழுவதும் பரவி, நீரே தெரியாதவாறு மூடி விடும். நீரும் கெட்டு விடும்.

ஆகாயத்தாமரை பற்றிய ஆராய்ச்சி மூலம் கற்பூர வள்ளி இலை பயன் படுத்தி கட்டுப்படுத்துவது பற்றிய செய்தியை முன்பே படித்து உள்ளோம். ஆகாயத்தாமரை  எப்படி இயற்கை உரம் உருவாக்கலாம் என்பதையும் படித்து உள்ளோம். இப்போது Dr கதிரேசன் ஆகாயத்தாமரை   இயற்கை முறை மூலம் பூச்சிகளை பயன் படுத்தி ஆகாயத்தாமரை  கட்டுப்படுத்துவது எப்படி என்பதை பற்றிய ஒரு செய்தி

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி?

நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ, ஆகாயத்தாமரைகள் மட்டும் செழித்து வளர்ந்திருக்கும். மடைகளிலும், மதகுகளையும் அடைத்தபடி வளர்ந்திருக்கும் இவற்றை அழிப்பது சவாலான விஷயம். ஆராய்ச்சி ரீதியாக ஆகாயத்தாமரைகளை அழிப்பது குறித்து சாதித்துள்ளார் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் கதிரேசன்.

ஆராய்ச்சி முடிவுகள் குறித்து அவர் கூறியது:

 •  நிலத்தில் பயன்படுத்தக்கூடிய களைக்கொல்லிகளை நீர்நிலைகளில் பயன்படுத்தினால் ஆகாயத்தாமரைகள் இறந்துவிடும். அதில் மீன்கள் வளர்க்க முடியாது. அப்படியே வளர்த்தாலும் திசுக்கள் மாறுபாடு என்பது பிரச்னையாக இருக்கும்.
 • வயலில் உள்ள களை என்றால் விவசாயியே கட்டுப்படுத்தி விடுவார். நீர்நிலைகள் பொதுவான இடம் என்பதால் யார் இந்த வேலையை செய்வது என்ற கேள்வி வரும். எனவே ஆகாயத்தாமரைகளை அழிப்பது, பயன்படுத்துவது என்ற இரண்டு முறைகளில் ஆராய்ச்சி செய்தோம்.
 • மாடுகளுக்கு பசுந்தீவனமாக இவற்றை கொடுக்கும் போது வயிறு உப்புசம் ஆகிவிட்டது.மாட்டுத்தீவனத்துடன் 10 சதவீதம் கலந்து கொடுத்தபோது அவற்றின் ரத்தத்திலோ, செல்களிலோ பிரச்னை இல்லை.
 • இலைகளை மட்கச் செய்து உரமாக்கியும், பசுந்தாள் உரமாகவும் நிலத்தில் பயன்படுத்தலாம்.
 • கூன்வண்டு, புல்கெண்டை மீன் ஆகாயத்தாமரை இலைகளின் மெழுகு போன்ற பகுதியை கூன் வண்டுகள் அரித்து தின்றுவிடும். நீர்நிலைகளில் 10 – 15 நாட்களுக்கு கூன்வண்டுகளை விட வேண்டும்.
 • அதன்பின் கற்பூரவல்லி இலையை பவுடராக்கி அதன் சாற்றை 30 சதவீதம் தெளிக்க வேண்டும்.இதன் வேதிக்குணம் ஆகாயத்தாமரை வேர் வழியாக இலைக்குள் எளிதாக சென்று நுண்ணுாட்டச் சத்துக்களை வெளியேற்றி சுருங்கி கருகச்செய்து விடும். புல்கெண்டை மீன்கள் மூலமும் இலைகளை கட்டுப்படுத்தலாம்.

நானோ இழை தயாரிப்பு

 • தாவரங்களில் செல்லுலோஸ் எனும் பொருளில் இருந்து நானோ இழைகள் தயாரிக்கப்படுகிறது. ஆகாயத்தாமரை இலைகளில் அதிகபட்சமாக 64 சதவீதம் செல்லுலோஸ் உள்ளது.ஒரு மில்லிமீட்டரில் லட்சத்தில் ஒருபகுதி தான் நானோ மீட்டர்.
 • இந்த இலையில் இருந்து 5 – 50 நானோமீட்டர் தடிமனுள்ள நானோ இழைகள் தயாரித்தோம்.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பயோ டெக்னாலஜி அன்ட் டாக்ஸிகாலஜி சேர்ந்த ரமேஷ் இந்த ஆராய்ச்சியை சேர்ந்து செய்தார்.
 • தியேட்டர்களில் எக்கோ வராமல் பாதுகாக்கும் அட்டையுடன் இந்த இழை பயன்படுத்தப்படுகிறது. நானோ இழை தயாரிக்கும் முறையை பின்பற்றுவதற்கான காப்புரிமை வாங்கியுள்ளோம். மற்றவர்களுக்கு இத்தொழில்நுட்பத்தை கற்றுத்தர உள்ளோம், என்றார்.

இமெயில்: rmkathiresan.agron@gmail.com.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி?

 1. Smartmani b.sc agri.,., says:

  My dear sir.very nice ,Namma annamalai nagr Pc, Kulathil erukum thavarathai alikum padi vuthiravaatham kidunga sir,,,Antha tthaVarathin meethu herbicide adicha water ku problem varum,so makkal antha water tha use panranga…pls co operative, tnk u sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *