தேனி மாவட்ட மலைப்பகுதிகளில், விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்யும் வனவிலங்குகளை விரட்ட விவசாயிகள், தோட்டங்களில் ஸ்பீக்கர்களை கட்டி அலற விட்டு வருகின்றனர்.
- தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கடலை, வாழை, வெண்டைக்காய், பீன்ஸ், கீரைவகைகள், புதினா, மல்லி, உட்பட தோட்டக்கலை பயிர்களை சொட்டு நீர் பாசனம் முறையில் அதிகம் சாகுபடி செய்கின்றனர்.
- தற்போதைய வறட்சி காரணமாக வனத்திற்குள் எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை.
- இதனால் காட்டு மாடுகள், கேழையாடுகள், சிறுத்தைகள், யானைகள் உட்பட வனவிலங்குகள் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. சில நேரங்களில் வனவிலங்குகளால் விவசாயிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. நேற்று, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுமாடுகள் பயிர்களை நாசம் செய்தன.
- வனவிலங்குகளை அடித்து விரட்டுவது சட்டப்படி குற்றம்.
சாத்தியமில்லாத செயலும் கூட. - எனவே, விவசாயிகள் தோட்டங்களில் ஸ்பீக்கர்களை கட்டி, வெடி வெடிப்பது போலவும், யானை பிளிறுவது போலவும் பதிவு செய்து, போட்டு வருகின்றனர்.
- இந்த வெடிச்சத்தம், யானை பிளிறும் சத்தங்களை கேட்டதும், வனவிலங்குகள் ஓடிப்போய் விடுகின்றன.
- இரவில் தோட்டங்களுக்குள், சில மணி நேரத்திற்கு ஒருமுறை இப்படி வெடிச்சத்தத்தை ஸ்பீக்கரில் போடுகிறோம். எனவே வனவிலங்குகள் தொல்லை அறவே இல்லை, என விவசாயிகள் தெரிவித்தனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்