100 நாட்கள் வேலை உத்தரவாதம் தரும் மதிய அரசின் திட்டத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய வேலை ஆட்கள் விவசாய வேலையை விட்டு மற்ற வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இது வேகம் பிடித்து இப்போது, விவசாயம், மேலை நாடுகள் போல், இயந்திர மாயம் ஆகிவருகிறது! உலகத்திலேயே மக்கள் தொகை இரண்டாம் இடம் உள்ள இந்தியாவில் நிலை!
விவசாய வேலைகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரிப்பு
கச்சிராயபாளையம் பகுதியில் தற்போது விவசாய வேலைகளுக்கு முற்றிலும் இயந்திரங்களை பயன் படுத்தும் நிலை அதிகரித்து வருகின்றது. கச்சிராயபாளையம் சுற்று பகுதிகள் கிராமங்களை அதிகமாக கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயம் செய்வதில் முனைப்புடன் உள்ளனர்.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நவீனமுறையில் பயிர் செய்வதிலும், பல புதிய பயிர்களை பயிரிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு கூலி ஆட்களின் தட்டுப்பாடு உள்ளதால் பணிகளில் தாமதம் ஏற்படுவதுடன் நஷ்டம் ஏற்படும் சூழலும் உள்ளது.
விவசாய வேலைகளுக்கு நவீன இயந்திரங்களின் வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வேலைகள் சுலபமாக முடிவதுடன் நேரமும் மிச்சமாகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.
நெல் அறுவடைக்கு , கரும்பு வெட்டுவற்கு, பயிர் நடவு செய்ய என பல விவசாய வேலைகளுக்கு இயந்திரங்கள் வந்த நிலையில், கச்சிராயபாளையம் பகுதியில் உலா வரும் வைக்கோல் கட்டும் இயந்திரம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் மூலம் கட்டப்படும் வைக்கோல் உருளை வடிவ கட்டுகளாக சனல் கொண்டு கட்டப்படுகிறது.
இதனை எடுத்த செல்லவும் சுலபமாக உள்ளது.
வைக்கோல் கட்டும் இயந்திரத்திற்கு கட்டு ஒன்றுக்கு 40 ரூபாய் கட்டணம் பெறுகின்றனர். ஒரு ஏக்கருக்கு 40-50 கட்டுகள் வருவதாக இதன் உரிமையாளர்கள் கூறினர். ஒரு ஏக்கர் நிலத்தில் வைக்கோல் கட்டுதற்கு 1600-2000 ரூபாய் செலவாகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்