தமிழ்நாடு வேளாண் பல்கலையின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று இதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில், பருத்தி மற்றும் மக்காச்சோளம் வீரிய ஒட்டு விதை உற்பத்தி, நவீன கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், காய்கறி விதை உற்பத்தி, தோட்டக்கலை பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில் நுட்பங்களும், பயிர் பெருக்க முறைகளும், காளான் வளர்ப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துதல், தரிசு நில மேம்பாடு, தேனீ வளர்ப்பு, திடக்கழிவுகளும், மண்புழு உரம் தயாரித்தல் தொழில் நுட்பங்கள், பண்ணை கருவிகள் மற்றும் இயந்திரங்களை பழுது பார்த்தல், பராமரித்தல் போன்ற பாடங்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள், பருத்தி சாகுபடி தொழில் நுட்பங்கள், அலங்கார தோட்டம் அமைத்தல், நவீன பாசன முறை மேலாண்மை, மூலிகை பயிர்கள், அடுமனை பொருட்கள், மிட்டாய் மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், நவீன களை மேலாண்மை, காட்டாமணக்கு சாகுபடி மற்றும் பயோ டீசல் உற்பத்தி தொழில்நுட்பங்கள், மலர் சாகுபடி தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு தொழில் நுட்பம், அங்கக வேளாண்மை பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வித்தகுதி ஆறாம் வகுப்பு, வயது வரம்பில்லை. பயிற்சி காலம் ஆறு மாதங்கள். அனைத்து பாடங்களுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது. பாடங்கள் மற்றும் பயிற்சிகள் ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்.
தொடர்பு கொள்க:
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி துறை,
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்
கோயம்பதோர் 641003
தொலைபேசி: 04225511229/04225511429
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்