இந்திய மிளகாய் இறக்குமதி தடை

சிறிது நாட்கள் முன்பு இந்தியாவின் புகழ் பெற்ற அல்பான்சோ மாம்பழங்கள் இறக்குமதி செய்ய ஐரோப்பா தடை செய்தது. அளவுக்கு அதிகம் பூச்சி மருந்துகளை  படுத்துவதால் இந்த தடை. இந்தியாவில் தான் உலகத்தில் தடை செய்ய  எத்தனையோ பூச்சி மருந்துகள் எளிதாக கிடைக்கிறதே!

இப்போது சவுதி அரேபியா நாடு இந்தியாவில் இருந்து மிளகாய் இறக்குமதி செய்ய தடை செய்து உள்ளது.. தினமலரில் இருந்து செய்தி

கொச்சி:இந்திய பச்சை மிளகாய் இறக்குமதிக்கு, சவுதி அரேபிய அரசு, தடை விதித்துள்ளது.வேளாண் சாகுபடியை அதிகரிக்க, ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகளை இந்திய விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவதாக, சவுதி அரேபியா ஏற்கனவே புகார் தெரிவித்து வந்தது.இதையடுத்து, இந்திய பச்சை மிளகாயில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, பூச்சி கொல்லி மருந்து அதிகம் உள்ளதால், அதன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என, சவுதி வேளாண் அமைச்சகம் எச்சரித்திருந்தது.  இதை தொடர்ந்து, இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா), பச்சை மிளகாய் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு, ஏற்றுமதியாளர்களை கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், தரக் குறைபாடு காரணமாக, இந்திய பச்சை மிளகாய் இறக்குமதிக்கு, சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

கடந்த வாரம் அமலுக்கு வந்துள்ள இந்த தடையால், இந்தியாவில் இருந்து அந்நாட்டிற்கு அனுப்பப்பட்ட ஆறு டன் பச்சை மிளகாயை இறக்குமதி செய்ய, சுங்க இலாகாவினர் அனுமதி மறுத்துள்ளனர்.கடந்த மாதம், ஐரோப்பிய கூட்டமைப்பு, இந்திய அல்போன்சா மாம்பழம் மற்றும் நான்கு வகை காய்கறிகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில், சவுதியில், இந்திய பச்சை மிளகாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *