சோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள்

  • சோளக் கதிர்களை அறுவடை செய்தபின் 2 நாள் வெயிலில் காய வைத்து, சோளமணிகளை உதிர்க்காமல் அப்படியே ‘பட்டரையில்’ சேமித்தால் தேவைப்படும்போது எடுத்து, கதிர் அடித்து, மணிகளைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.
  • மாறுபட்ட காலநிலையிலும், நல்ல முளைப்பு திறனைப் பெற சோள விதைகளை சாதாரண உப்பு கரைசலில் ஊற வைத்து, விதைக்கவேண்டும்.
  • சோள விதைகளை பசுமாட்டுக் கோமியத்தில் அரைமணி நேரம் ஊறவைத்து, பின் வெயிலில் உலர்த்தி விதைத்தால், வறட்சியைத் தாக்கி வளர்வதோடு கரிப்பூட்டு நோயையும் கட்டுப்படுத்தலாம்.
  • விரைவாக முளைக்கவும் தண்டு ஈ தாக்குதலை தடுக்க, போதிய அளவு சுடுநீரில் வைத்து, அதை திறந்த வெளியில் இரவு முழுவதும் ஆறும்படியாக வைத்திருக்கவேண்டும். அடுத்த நாள் விதைப்பிற்கு முன்பு, சோள விதைகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின் விதைத்தால் நல்ல தரமான நாற்றுக்களைப் பெறலாம்.
  • இனப்பயிரின் ஊடே நாட்டுக் கலப்பையை ஓடவிட்டால், சராசரி செடி எண்ணிக்கை இருக்கும்படி செய்யலாம்.
  • வைகாசி – ஆனி (மே – ஜீன்) மாதத்தில் விதைத்தால், தண்டு ஈ மற்றும் துளைப்பான் தாக்குதலை தடுக்கலாம்.
  • சோளத்துடன், தட்டைப்பயிரை ஊடும்பயிர் செய்தால், தட்டைப்பயிரின் நெடி, தண்டு தாக்குதலை தடுக்கலாம்.
  • அவரையை ஊடுப்பயிர் செய்தாலும் தண்டு துளைப்பான் தாக்கம் குறையும்.
  • வேப்பம் புண்ணாக்கு கரைசலைச் சொட்டுச் சொட்டாக தண்டில் ஊற்றினால் குருத்து துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • தாக்குதலிலுள்ள இலைகளின் மீது, சாம்பலைத் தூவினால் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
  • பால் பிடிக்கும் தருணத்தில் சாம்பல் தூவுவதால் கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
  • கொத்தமல்லியை சோளத்துடன் கலப்பு பயிராக பயிர் செய்தால் ‘ஸ்ரைகா’ எனப்படும் தொத்துக் களையை கட்டுப்படுத்த முடியும்.
  • கறுப்பு துணியை நீளமான பூச்சிகள் கட்டி, நடுவயலில் வைத்தால் காக்காவை விரட்டும்.
  • தானிய சேமிப்பு பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, சோளத்துடன் சாம்பலை கலந்து வைக்கலாம்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *