ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்!

விவசாயத்தில செலவுக்கும் வரவுக்குமே சரியாப் போகுது, இதுல எங்கெருந்து லாபம் கிடைக்குறது!” இதுதான் இன்று பெரும்பாலான விவசாயிகளின் புலம்பல். இந்தக் காரணத்தினாலேயே விவசாயத்தைக் கைவிட்டோர் பலர்.

அதாவது இப்போது நீங்கள் விவசாயம் செய்ய வேண்டுமானால், அதற்காக நீங்கள் வெளியாட்களையோ, வெளியிலிருந்து வாங்கப்படும் இடுபொருட்களையோ நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சென்ற தலைமுறைக்கு முன்புவரை, இந்த நிலைமை நிச்சயம் இல்லை! ஏர் உழுதல் முதல் கதிரடித்து, களம்சேர்த்து வியாபாரம் செய்வது வரை, அனைத்தையும் விவசாயிகள் தன்னிச்சையாக சுயசார்புடன் மேற்கொண்டு வந்தனர். ஆனால், தற்போது உழவதற்கும், ரசாயன உரம் வாங்கவும், விதைகளை வாங்கவும், அறுவடை செய்வதற்கான ஆட்களுக்காகவும் இப்படி ஒவ்வொன்றிற்கும் விவசாயிகள் இன்னொருவரையே நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையை மாற்றும் விதத்தில், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் என்ற இயற்கை வேளாண் முறையை தமிழக விவசாயிகளுக்கு கற்றுத்தர சுபாஷ் பாலேக்கர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் வருகிறார்.

விவசாயிகள் தற்சார்புடன் இருக்கலாம்

சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண் முறையினைப் பின்பற்றும்போது, விவசாயிகள் வெளியாட்களையோ அல்லது வெளியிலிருந்து கிடைக்ககூடிய இடுபொருட்களையோ நம்பியிருக்க வேண்டிய தேவையிருக்காது. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும், ரசாயன உரங்களையும் வெளியிலிருந்து பெரும்செலவு செய்து வாங்கி, மண்ணைக் கெடுப்பதோடு தங்களையும் தங்களை நம்பி இருக்கும் நுகர்வோரின் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் நிலை இதில் இருக்காது. விதைக்காகவும், உரத்திற்காகவும், பூச்சிக்கொல்லிக்காகவும் விவசாயிகள் வெளியுலகத்தை சார்ந்திராமல், தாங்களே தங்கள் நிலத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்!

suresh

 

 

 

 

செலவில்லாமல் இயற்கை விவசாயம்

அதுமட்டுமல்லாமல், சுபாஷ் பாலேக்கர் கற்பிக்கும் இந்த இயற்கை வேளாண் முறைக்கு ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எனப் பெயரிட்டுள்ளார். அதாவது செலவே இல்லாமல், இயற்கை வேளாண்மையை நாம் செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது இந்த வேளாண்முறை.பொதுவாக தண்ணீர் பற்றாக்குறை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளதைப் பார்க்க முடிகிறது. அதற்கு இந்த ஜீரோ பட்ஜெட் வேளாண்மை தீர்வைத் தருகிறது; குறைவான நீர்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் உத்தியை கற்றுத்தருகிறது.

மேலும், வேலை ஆட்கள் பற்றாக்குறை விவசாயத்தில் ஒரு நெருக்கடியை தந்துள்ளது. விவசாய வேலைக்கு கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருப்பதோடு, அவர்களின் ஊதியத் தொகையும் அதிகரித்து விட்டதால் செலவு அதிகரித்துவிடுகிறது. இந்நிலையின் தீவிரம் சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்முறையைப் பின்பற்றுகையில் வெகுவாக குறைகிறது. நீர்ப்பாசனத்தில், ரசாயன இடுபொருட்களின் பயன்பாடில்லாமல், இயற்கையில் தங்களது நிலங்களில் கிடைக்கும் பொருட்களை வைத்து, செலவே இல்லாமல் ஜீரோ பட்ஜெட்டில் விவசாயம் செய்யும்முறையாக இம்முறை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது.

நுகர்வோர் நலன் காக்கப்படுதல்

பொதுவாக இன்று, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றினால் பலவித பாதிப்புகள் வருவதை மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். நஞ்சில்லா உணவை உண்ண வேண்டுமென்பதே அனைவரின் ஆவலாக உள்ளது. ஆனால், அதற்கு வழியில்லாமல், பெரும்பான்மை விவசாயிகள் ரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தினால்தான் அதிக மகசூல் ஈட்டமுடியுமென்ற அறியாமையில் சிக்கி, இயற்கை வேளாண்மையை புறந்தள்ளியுள்ளனர். சுபாஷ் பாலேக்கரின் இந்த இயற்கை விவசாய முறை அதற்கு ஒருநல்ல தீர்வாக இருக்கும்.

இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களின் விலை அதிகமாக உள்ளதால் அதை சாமானிய மக்கள் வாங்கி உண்ணும் நிலை இன்று இல்லை! ஆனால், பெரும்பான்மை விவசாயிகள் இம்முறையைப் பின்பற்ற முன்வரும்போது, அப்போது சாமானியர்களும் இயற்கை விளைபொருட்களை வாங்கியுண்ணும் நிலை நிச்சயம் உருவாகும். நஞ்சில்லா உணவு என்பது அனைவருக்கும் சாத்தியமாகும். இப்போது நாம் அதை நோக்கி நமது முதல் அடியை எடுத்து வைக்கும் நேரம் வந்துள்ளது!

ஜீரோ பட்ஜெட்டில் இயற்கைவிவசாயம் செய்வது எப்படி? இயற்கை விவசாயத்தை முழுமையாகக் கடைபிடிக்க முடியுமா? இதுபோன்ற கேள்விகள் உங்கள்மனதில் தோன்றலாம்! உங்கள் சந்தேகங்களை எல்லாம் போக்கும் வகையிலும், இதன்நடைமுறை சாத்தியத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றுவருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்தவகுப்பின் தன்மையானது அமையும். நிகழ்ச்சியின் 8 நாட்களும் முழுமையாகக் கலந்துகொள்பவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளும் ஆதரவும் வழங்கப்படும். இதன்மூலம் இயற்கை விவசாயம் குறித்த தெளிவான பார்வையை நீங்கள் பெறுவது உறுதி.

பல்லடம் திருச்சி மெயின் ரோடு, ஸ்ரீ விக்னேஷ்மஹால் (இலட்சுமி மில்ஸ் பஸ் நிறுத்தம்)ல் 10.12.2015 முதல் 17.12.15 வரை, 8 நாட்கள் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்! எட்டு நாட்களும் பயிற்சியில் கலந்துகொள்வது அவசியம்!

ஜீரோ பட்ஜெட் சேனாதிபதி (பயிற்றுநர்) சிறப்பு பயிற்சி வகுப்பு கற்றுக்கொள்ள அழைக்கிறது ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்.

இந்தபயிற்சிக்கான விண்ணப்பத்தை www.projectgreenhands.org/ZBT என்றவலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் அனைத்து ஈஷா நர்சரிகளிலும் விண்ணப்பங்கள்கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு: 09442590068, 09442590036


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்!

  1. இராம.தாண்டவராயன் says:

    இயற்கை விவசாயம் செய்ய ஆசை வழி தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *