தென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம்

தென்னை நார்க்கழிவிலிருந்து தயாரிக்கப்படும் தொழு உரத்தை பயன்படுத்துவதன் மூலம் பயிர்கள் வறட்சியை தாக்குபிடித்து அதிக மகசூலை தருவதாக நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்முறை

  • சராசரியாக 10 ஆயிரம் தேங்காய் மட்டைகளில் இருந்து ஒரு டன் நார்க்கழிவு கிடைக்கும்.
  • இதனை மக்க வைக்க 5கிலோ யூரியா மற்றும் 5 புட்டிகள் புளுரோட்டஸ் காளான் வித்துக்கள் அவசியமாகும்.
  • நிழலில் 100கிலோ தென்னை நார்க்கழிவை சீராக பரப்பி அதன் மீது ஒரு புட்டி காளான் வித்தை தூவ வேண்டும்.
  • இதன் மேல் பகுதியில் மேலும் 100 கிலோ தென்னை நார்க்கழிவை சீராக பரப்பி அதன் மீது ஒரு புட்டி காளான் வித்தை தூவ வேண்டும்.
  • இதேபோல அடுத்தடுத்து 10 அடுக்குகள் அமைக்க வேண்டும்.
  • இந்த தென்னை நார்க்கழிவுகளை கையில் எடுக்கும் போது ஈரம் இருக்கும் வகையில் தண்ணீர் தெளித்து 40நாட்கள் வரை மக்க வைக்க வேண்டும்.
  • மக்கிய தென்னை நார்க்கழிவு கருப்பு நிறமாவதோடு, பாதியாக குறைந்து விடும். இதனை சேமித்துவைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

பயன்கள்

  • நார்க்கழிவில் உள்ள லிக்னின் மண்ணில் சேர்ந்து மண்ணின் வளத்திற்கு அடிப்படை பொருளான மண் மக்கு அமைய வழி ஏற்படுகிறது.
  • மேலும் மண்ணில் காற்றோட்டம், நீர் ஊடுறுவும் திறன், நீர் பிடிப்பு திறன் மேம்பட்டு பயிரின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  • மானாவாரி நிலங்களில் பருவமழைகாலங்களில் அதிகளவில் மழை நீரை உறிஞ்சி மண்ணின் ஈரத்தன்மையை அதிகப்படுத்துவதால் பயிருக்கு நீண்ட நாட்கள் நீர் கிடைக்கிறது.
  • தென்னை நார்க்கழிவு தனது எடையைப்போல 2 மடங்கு எடை நீரைப் பிடித்து வைப்பதால் பயிர்கள் வறட்சியை தாக்குப்பிடிப்பதோடு, அதிக மகசூலும் கிடைக்கிறது.

நன்றி: தினமலர்

இயற்கை உரங்களை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *