செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்

“தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது’ என, நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் ஜோதேடியஸ் தெரிவித்துள்ளார்.

  • நாமக்கல் வட்டாரத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணை கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், 15 அடி நீளம், ஆறடி அகலம், இரண்டு அடி ஆழம் உள்ள எரு குழிகள் வெட்டி, அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயார் செய்யலாம்.
  • அதற்கு, 750 கிலோ எரு, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 100 கிலோ யூரியா, இரண்டு கிலோ சூடோமோனஸ், பத்து பாக்கெட் உயிர் உரம் ஆகியவற்றை கலந்து, எருக்குழியில் இட்டு, மேற்புறம் ஈரமண் கொண்டு பூசுதல் வேண்டும்.
  • இதை, 15 நாட்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
  • இரண்டு மாதங்களுக்குள், நன்கு மக்கிய செறிவூட்டப்பட்ட, தரமான தொழு உரம் தயாராகிவிடும்.
  • அதற்கு, ஒரு எருக்குழி அமைக்க, 50 சதவீதம் மானியமாக, 2,236 ரூபாய் வழங்கப்படும். பயனடைய விரும்பும் விவசாயிகள், நாமக்கல் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *