மண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும்

விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட அளவே தழைச்சத்து தரும் யூரியா உரத்தினை இடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சவுந்திரராஜன் கூறியதாவது

விவசாயத்திற்கு தேவையான முக்கிய இடுபொருளான, உரங்கள் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு 150 கோடி டான்பெட் நிறுவனத்திற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கியுள்ளது.

இதனை கொண்டு டான்பெட் நிறுவனம் டி.ஏ.பி.,உரத்தினை கொள்முதல் செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

இதுதவிர தமிழக அரசு உரங்களின் மீதான 4 சத மதிப்பு கூட்டப்பட்ட வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம் 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.11 முதல் 52 வவைர உரங்களின் விலை குறைந்துள்ளது.தற்போது யூரியா உரங்கள் மட்டும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

  • எனவே விவசாயிகள் அதிக அளவில் யூரியா உரத்தினை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
  • யூரியா போன்ற தழைச்சத்தை அளிக்க கூடிய உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட, அதிக அளவில் பயன்படுத்தினால் பயிர்களின் வளர்ச்சி அதிகரித்து, பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.
  • இதன் மூலம் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
  • விவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேட்டில் உள்ள மண்வள பரிசோதனையின் அடிப்படையில் அல்லது பொது பரிந்துரையின் பேரில் உரங்களை இட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • யூரியாவுடன், மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை தவறாமல் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
  • மேலும் விவசாயிகளிடையே சிறிய அளவிலான யூரியா உரங்கள் அதிக பலனை தரக்கூடியது என்ற தவறான எண்ணம் நிலவி வருகிறது. குருணை வடிவிலான யூரியா மற்றும் சிறிய அளவிலான யூரியா இரண்டிலும் தழைச்சத்து 46 சதம் தான் உள்ளது.
  • எனவே எந்த வடிவில் இருந்தாலும் எவ்வித சந்தேகமும் இன்றி யூரியா உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவினை மட்டும் இட்டு பலனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர் 

Click Here

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *