மண் புழு உர தயாரிப்பு பயிற்சி முகாம்

  • ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 2015 ஜனவரி 30-ஆம் தேதி மண் புழு உரம் தயாரிப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.
  •  இயற்கை உரங்களை இடுவதால் மண்ணின் பண்புகள் மேம்பட்டு பயிர் விளைச்சல் அதிகரிக்கின்றது. ஆனால் எளிதல் கிடைக்காததாலும், அதிக விலையாலும் உழவர்கள் இயற்கை உரங்களை பயன்படுத்தத் தயங்குகின்றனர்.
  •  பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தென்னை மட்டைகள் மற்றும் ஓலைகளில் வியத்தகு அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  • அவற்றை முறையாக மறுசுழற்சி செய்தால் ரசாயன உரங்களின் தேவையை வெகுவாகக் குறைக்கலாம்.
  •  இதைக் கருத்தில் கொண்டு  தென்னை மட்டை வெட்டும் இயந்திரத்தின் செயல் விளக்கத்துடன் கூடிய மண் புழு உரம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி அழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஜன.30-ம் தேதி நடைபெறவுள்ளது.
  •  இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆழியார் நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையம் அல்லது 04253288722, 09443059228 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *