மழை காலங்களில் கால்நடை பாதுகாப்பு

தொடர் மழை மற்றும் ஈரத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க கால்நடைத்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

  • ஆண்டிபட்டி தாலுகாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. விவசாயப் பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படும்.
  • கடந்த சில நாட்களாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் செடி, கொடிகள் தழைத்து பசுந்தீவனங்கள் அதிகரித்துள்ளன.
  • மழையால் விளைந்துள்ள பசுந்தீவனங்களை கால்நடைகள் சாப்பிடும்போது கழிச்சல் நோய் ஏற்படும்.
  • இதனால் புதிதாக பறித்த இலை தழைகளை நன்கு காய வைத்த பின் கால்நடைகளுக்கு தீவனமாக தர வேண்டும்.
  • தற்போதுள்ள சூழலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.
  • ஈரமான இடங்களில் கால்நடைகளை கட்டி வைப்பதால் கால் வீக்க நோய் ஏற்படும்.
  • பால் கறந்தவுடன் மாடுகளை படுக்க வைக்காமல் சிறிது நேரம் கழித்து படுக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கால்நடைகளை மடிநோயில் இருந்து பாதுகாக்கலாம்.
  • மழைகாலங்களில் இடியின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால் கால்நடைகளை மரத்திற்கு கீழும், திறந்த வெளியிலும் கட்டிப்போடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஈரம் இல்லாத காய்ந்த இடத்தில் செட் அமைத்து கால்நடைகளை பராமரிப்பது பாதுகாப்பாக இருக்கும்.
  • கால்நடைகள் வழக்கத்திற்கு மாறான நிலையில் இருந்தால், உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *