கொய்யா சாகுபடியில் மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம்!

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகள் உள்ளன. தண்ணீர் வந்தால் இருபோக விவசாயம் நடக்கும். தண்ணீர் வராவிட்டால் நிலைமை தலைகீழ் தான். மதுரையை பொறுத்தமட்டில் கிணற்று பாசனம் மூலம் நெல், வாழை போன்ற பாரம்பரிய விவசாயம் நடக்கிறது.

“பாரம்பரிய விவசாயத்தில் எதிர்பார்த்த லாபத்தை எதிர்பார்க்க இயலாது. “வந்தால் வரவு; போனால் செலவு’ என்ற நிலையிலேயே நெல், வாழை சாகுபடியில் ஈடுபட முடியும்,’ என்கின்றனர் அனுபவம் வாய்ந்த விவசாயிகள். இந்த வரிசையில் மதுரை நெடுமதுரையை சேர்ந்த விவசாயி மொக்கச்சாமி,60, விவசாயத்தில் புதுமையை புகுத்தி லாபம் ஈட்டி வருகிறார்.

மதுரையின் வறட்சி பகுதிகளில் நெடுமதுரை, வலையங்குளம், சோளங்குருணி, குரண்டி, திருமங்கலம் பகுதிகள் முதலிடம் வகிக்கிறது. இவற்றில் 99 சதவீத விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் மல்லிகை விளைவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் நெல், வாழை, மா போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளனர். துணிச்சல் மிக்க மொக்கச்சாமி, மூன்று ஏக்கர் நிலத்தில் கொய்யாவை விளைவித்து விவசாயத்தை லாபகரமாக மாற்றியுள்ளார். தவிர மா, தேக்கு தோட்டங்களையும் வைத்துள்ளார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

மொக்கச்சாமி கூறியதாவது: ஒட்டு வகை, குட்டை ரகத்தை சேர்ந்த “லக்னோ 49′ மற்றும் ஒட்டு வகை, நெட்டை ரகத்தை சேர்ந்த “லக்னோ 47′ ஆகிய கொய்யா நாற்றுகளை தேனி மாவட்டம் பெரியகுளம் தனியார் பண்ணையில் இருந்து வாங்கினேன்.

முதலில் சோதனை அடிப்படையில் வளர்த்தேன். மரத்தில் காய்கள் பூத்து குலுங்கின. அடுத்ததாக மூன்று ஏக்கரில் கொய்யா தோட்டம் அமைத்தேன். மருந்து செலவு தவிர்த்து மாதம் சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

நெல், வாழை போல் அதிகபடியான பராமரிப்பு கொய்யாவில் இல்லை. அடிஉரம், மேல்உரம் மற்றும் பூ பூக்கும்போது ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால் போதுமானது. போர்வெல் மூலம் கிணற்றிற்குள் தண்ணீர் பாய்ச்சி மீண்டும் மோட்டார் வைத்து உறிஞ்சி தோட்டத்துக்கு பாய்ச்சுகிறேன்.

குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செம்மண் நிலம் என்பதால் விளைச்சல் அமோகமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 கிலோ காய்கள் கிடைக்கிறது. முறையாக பராமரித்தால் பத்து முதல் 13 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.

தோட்டத்துக்கே வந்து சீசனுக்கு ஏற்ப கிலோ 20 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி சென்று 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கின்றனர். மதுரையின் தெற்குப்பகுதியில் கொய்யா விவசாயத்தை லாபகரமாக நான் மட்டுமே மாற்றியுள்ளேன். அடுத்ததாக சொட்டு நீர் பாசனம் மூலம், கொய்யா விவசாயத்தை விரிவாக்கவுள்ளேன் என்றார்.

தொடர்புக்கு 09543234975.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கொய்யா சாகுபடியில் மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம்!

  1. bala says:

    கொய்யா பயிரிட வேண்டாம்
    நான் இரண்டு ஏக்கர் கொய்யா மரங்கள் வைத்திருந்தேன் இயற்கை முறையிலே பராமரித்து வந்தேன்.
    மாவுபூச்சி தாக்குதல்,
    வறட்சி தாங்காமல் கருகுதல்,
    குறைந்த விலை,
    சீக்கிரம் அழுகுதல்,
    காய்களில் கரும்புள்ளி
    என ஏகபட்ட பிரச்சனைகள்.அதனால் 1.5 ஏக்கரில் உள்ள மரத்தை அழித்து அதில் ரெட்லேடி பப்பாளி நடவு செய்தேன்.இப்போது பழம் அறுவடை நடக்கிறது அதிக லாபம் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *