காடுகளை காக்க போராடும் தமிழர்

Sanctuary Asia என்ற ஆங்கில ஏடு சுற்று சூழல் மற்றும் காடுகளை பற்றிய புகழ் பெற்ற ஏடு. இதில் 2017 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் மற்றும் காடுகளை காப்பாற்ற போராடிய தனி மனிதர்களை கண்டு பிடித்து கௌரவிக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜெயச்சந்திரன் என்ற தமிழருக்கும் இந்த விருது கிடைத்து இருக்கிறது. இவரை பற்றி சற்று தெரிந்து கொள்வோமா?

இவர் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் காடுகளை காப்பாற்ற 1990 ஆண்டு முதல் முயன்று வருகிறார். தமிழ் நாடு பசுமை இயக்கம் மூலம் காடுகளை அழிக்க முயலும் மரம் வெட்டும் கூட்டங்களையும் அவற்றின் பின்னால் உள்ள அரசியல்வாதி/அதிகாரிகளை எதிர்த்து போராடியவர்.

இவர் மூலம் காடுகளை அழித்து புதிய சாலைகள் போடுவது தடுக்க பட்டது. மேட்டுப்பாளையம்-ஊட்டி புதிய சாலை, சத்தியமங்கலம் காடுகளில் ஹாசனுர்-கொள்ளேகால் சாலை, பிலிகிரி ரங்கபேட்டை மலைக்கு புதிய சாலை என்று பல சாலைகள் தடுக்கப்பட்டன. இந்த கள்ளர் – ஜாக்கரனை யானை கொரிடோர் இருந்த ஆக்கிரமைப்புகள் அகற்ற பட்டன.

இவற்றின் மூலம் பல ஆயிரக்கணக்கான ஹெக்ட்டர் பழம் காடுகள் காப்பாற்றப்பட்டன.

2009 ஆண்டில் கோர்ட் கேஸ் மூலம் ஸிகுர் யானை கொரிடோரில் திட்டமிடப்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் நிறுத்த பட்டன. சிங்காராவில் அமைக்க பட உள்ள நேஷனல் நுற்றினோ லேப் (National Nuetrino Lab)எதிர்த்தும் இவர் போராடி வருகிறார்.சிங்காரா புலி மற்றும் யானைகள் இருக்கும் காடு.

அவரால் முடிந்த வரை போராடி இதனை சாதித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா வன துறைகளிடம் வன மிருகனங்களை கொல்லும்  வேட்டையாளர்களை பிடுத்து கொடுத்து உதவி செய்து உள்ளார். அப்படி சிறையில் சென்று வெளியில் வந்த சிலர் திருந்தி இவருக்கே வேட்டையாளர்களை பிடுத்து கொடுக்க உதவி செய்து உள்ளனர்

இவரின் சத்தமில்லா சாதனைக்காக 2017 வருடத்திற்கான விருது கொடுக்கப்படுகிறது.

குப்பை படங்களின் ஹீரோவிற்கு பால் அபிஷேகம் செய்து மகிழும் தமிழர்களாகிய நாம், இப்படி ஏதோ ஒரு மூலையில் யாருடைய உதவியும் இல்லாமல் நம் எல்லோரும் சொத்தான காடுகளை காத்து வரும் இவரை மனதார பாராட்டுவோமா?

நன்றி: Sanctuary Asia


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *