யூரியா மானிய அரசியல்

மற்ற எல்லா உரங்களின் மீதும் உள்ள மானியங்களை கொஞ்சம் கொஞ்சமாக UPA அரசு குறைத்து வந்தது.
யூரியா மட்டும் விலை கட்டுப்பாடில் இருந்து வந்தது. பொருளாதார மேதைகள் (Economists), இந்திய தொழிர்வல்லுனர்கள் போன்றோர் இந்த மானியத்தையும் எடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக கேட்டு வந்தனர்.

இவர்கள் வாத படி எல்லா மானியங்கள் நிறுத்த பட வேண்டும், சந்தை தான் (Free market) ஒரு பொருளின் விலையை நிச்சயிக்க வேண்டும், அரசாங்கம் எந்த பொருளுக்கும் விலை நிர்ணயிக்க கூடாது என்பது.

யூரியா விலை ஏறினால் எல்லா விதமான விவசாய பொருட்களின் விளையும் ஏறும்!

அது சரி, இந்திய பொருளாதரத்தில் மானியமே (subsidies) இல்லையா?

ப. சாய்நாத் என்ற Magsaysay award வாங்கிய விவசாய நிபுணர், இந்திய பொருளாதரத்தில் மற்றவர்கள் எப்படிப்பட்ட மானியங்களை அனுபவிக்கின்றனர் என்று ஆய்ந்து Outlook பத்திரிகையில் எழுதிய விவரங்கள்:

  • இந்திய தொழிற் நிறுவனங்களுக்கு அளிக்க பட்ட Corporate Income tax சலுகைகள் மட்டுமே  2013-14 வருடத்தில் மட்டுமே 5,72,923 கோடி ரூபாய்!
  • அரசாங்கத்தில் 9 வருடங்களில் இப்படிப்பட்ட சலுகைகள் மட்டுமே 36.5 லட்ச கோடி ரூபாய்!! லட்ச கோடிகள் 2G ஊழல் மூலம் தான் நமக்கு தெரிய வந்தது.
  • இந்த சலுகைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே போகின்றன!
  • பணக்காரர்களும், தொழிற் நிறுவன உரிமையாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் சமயத்தில் நிதி அமைச்சரை சந்தித்து லாபி செய்து அவர்களுக்கு தேவை ஆனதை எடுத்து கொள்கிறார்கள்.
  • இப்படி பட்ட சலுகைகளை பாதி நிறுத்தினாலே இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறும்.
  • அதை விட்டு விட்டு விவசாயிகளுக்கும் மற்ற சமுதாயத்தில் நலிந்த மக்களின் சலுகைகளை பறிப்பது பாவம் இல்லையா?

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *