மக்காச்சோளம் தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்

தற்போது தமிழ்நாட்டில் உணவு மற்றும் தீவனத் தேவைக்காக பற்றாக்குறை உள்ளது.  மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயிகள் நல்ல பயன் பெற முடியும்.

  • நல்ல மகசூல் கிடைக்க உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும்.
  • மக்காச்சோளம் 90 முதல் 110 நாள்களிலேயே விளைந்து பலன் கொடுக்கும்.

மக்காச்சோளத்தை தாக்கும் நோய்கள்

குருத்து காயும் நோய்:

  • மக்காச்சோளத்தை தாக்கும் பூச்சிகளை பொறுத்தவரை ஒரு வகையான ஈ இலைகளில் முட்டையிடும்.
  • முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் தண்டைக் குடைந்து செல்லும்.
  • இதனால் நடுக்குருத்தின் அடிப்பாகம் பாதிக்கப்படும். முழுச் செடியும் காய்ந்து போவதற்கான வாய்ப்பும் உண்டு. இப்பூச்சி பெரும்பாலும் ஒரு மாத பயிரைத் தாக்கும்.
  • மீன், கருவாட்டு பொறியை வைத்து இப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். ஒரு ஹெக்டேருக்கு 12 அல்லது 13 என்ற அளவில் அமைக்க வேண்டும்.

இலைகாயும் நோய் :

  • இந்த நோய் மக்காச்சோளத்தை அதிகம் தாக்கும் நோய் ஆகும். இதை அடிச்சாம்பல் நோய் என்று விவசாயத் துறையினர் கூறுகின்றனர்.
  • இந்நோய் தாக்கினால் இலைகளின் அடிப்பாகம் வெண்மையாக மாறும். இலைகள் காய்ந்துவிடும். இலைகளின் நரம்புகள் கிழிந்து விடும். இலை நார் போலக் காணப்படும்.
  • இதைக் கட்டுப்படுத்த இந்நோய் தாக்கிய செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
  • 0.2 சதவீத மெட்டலாக்சில் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி குறித்த அப்பகுதி விவசாயத் துறை வல்லுநர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். முன் பருவத்திலேயே விதைக்க வேண்டும்.

பூச்சியால் தாக்கப்பட்டு குருத்து காய்ந்த செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மக்காச்சோளத்தைத் தாக்கும் பூச்சிகளுக்கான எதிர்பூச்சிகளான ஊக்குவிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வரலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *