துவரை மகசூல் அதிகரிக்க மாற்று முறை சாகுபடி

கோவை வேளாண் பல்கலையில், இளங்கலை வேளாண்மை பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் பாலக்கோடு தாலுகா பகுதியில் தங்கிருந்து பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலக்கோடு அடுத்த முனியப்பன் கோவில் கொட்டாய் கிராமத்தில், துவரை நடவு முறை தொழில் நுட்பம் குறித்து விளக்கினர்.

அட்மா திட்டதின் கீழ் அமைக்கப்பட்டிருந்த துவரை பாலித்தீன் பை நாற்றங்கால் நடவு நடந்தது.

  • நடவு முறை துவரை சாகுபடியால் ஏற்படும் நன்மைகள், பருவமழை தாமதமானலும், அதற்கேற்றவாறு குறுடத்த பருவத்தில் நடவு செய்ய இயலும்.
  • நடவு வயிலில் பயிரின் காலம், 25 முதல் 35 நாட்கள் குறைக்கப்படுகிறது.
  • அதிக ஆழத்தில் நடவு செய்யப்படுவதால், வேர் வளர்ச்சி அதிகரித்து, பயிர் வறட்சியை தாங்கி வளரும்.
  • வரிசை நடவு முறை செய்தல், பயிர் பாதுகாப்பு முறைகள், நடவு செய்த 20 முதல் 30 நாட்களில், ஐந்து முதல் ஆறு செ.மீ., அளவுக்கு நுனிக்குறுத்து கிள்ளி விடுதல், பக்க கிளைகளை அதிகரித்து விளைச்சல் கூடுகிறது, என்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர்.
  • பூப்பிடிக்க துவங்கியதும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயறு ஒண்டர் தெளிப்பதால், பூ உதிர்வது தடுக்கப்படுவதோடு, காய்களின் எண்ணிக்கை கூடுகிறது.
  • நேரடி விதைப்பின் மூலம் கிடைக்கும் மசூலை விட இந்த முறையில், 30 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும், என மாணவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *