சமவெளியில் மிளகு சாகுபடி

மலைப் பகுதிகளில் மட்டுமே விளையும் மிளகை, தரைப் பகுதியில் தென்னை  ஊடு பயிராக சாகுபடி செய்து வருமானம் ஈட்டும், புதுக்கோட்டை விவசாயி தங்கையன்:

  • தென்னை மரங்களுக்கு இடையே உள்ள நிலத்தை உழுது, தொழு உரமிட வேண்டும்.
  • பிறகு, கிளுவை, வாதரசா, முருங்கை கன்றுகளை, 7க்கு 7 அடி இடைவெளியில் வைத்து மண்ணை அணைத்து விட வேண்டும்.கன்றுகள் கொழுந்து விட்டு வளர்ந்த பின், அவற்றினுாடே, 1 அடி ஆழத்தில் குழி எடுத்து, மிளகு நாற்றுகளை நட்டு, மண் அணைத்து விட வேண்டும்.
  • ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் ஊடு பயிராக மிளகு சாகுபடி செய்வதற்கு, 400 முதல், 600 நாற்றுகள் தேவைப்படும்.கேரளாவிலுள்ள நாற்று உற்பத்திப் பண்ணையிலிருந்து தான் மிளகு நாற்றுகள் வாங்கினேன்.
  • சம பரப்பில் மிளகு சாகுபடி செய்ய, முறையான வடிகால் வசதியுடைய, செம்மண் பரப்பு நிலம் ஏற்றது.
  • மிளகுச் செடிகளை பயிர் செய்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின் தான் காய்கள் காய்க்க துவங்கும். தொடர்ச்சியாக, 35 ஆண்டு காலம் வரை மகசூல் பெறலாம்.
  • மிளகு மருத்துவ குணம் வாய்ந்த பயிர் என்பதால், செயற்கை உரங்கள் அளிக்க வேண்டியதில்லை. இருப்பினும், ஆண்டுக்கு இரண்டு முறை, அடியுரமாக தொழு உரம் இட வேண்டும்.
  • அது மட்டுமல்லாது, மகசூலைப் பெருக்கவும், செடிகள் செழுமையாக வளரவும், பஞ்சகவ்யா கரைசலைத் தெளிக்க வேண்டும்.செ
  • டியின் வேர்ப் பகுதியில் நீர் தேங்காத வண்ணம், வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • தற்போது மிளகுச் செடிகளுக்கு சொட்டு நீர்ப் பாசன முறையைப் பின்பற்றி தான், நீர் பாய்ச்சி வருகிறேன்.
  • பயிர் செய்த 4 முதல், 10 ஆண்டுகள் வரை, ஒவ்வொரு செடியிலிருந்தும், 100 – 250 கிராம் மிளகு தான் அறுவடை செய்யலாம்.
  • அதற்கடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு செடியிலிருந்தும், 400 கிராம் வரை மிளகை அறுவடை செய்யலாம்.
  • பருவ மழையைப் பொறுத்தே மிளகுச் செடிகளில் காய் காய்க்கும் தன்மையும், மகசூலும் அமையும்.
  • மிளகுக்கு, சந்தையில் எப்போதுமே தேவை அதிகமிருப்பதால், சந்தையில் மிளகை, அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்.
  • தென்னையில் ஊடு பயிராக மிளகு சாகுபடி செய்யவும், பராமரிக்கவும், ஆண்டுக்கு, 20 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும். தற்போது சந்தையில், ஒரு கிலோ மிளகு, 600 – 700 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. ஒரு ஏக்கருக்கு, அனைத்துச் செலவுகளும் போக, 70 ஆயிரம் ரூபாயை வருவாயாகப் பெறலாம்

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சமவெளியில் மிளகு சாகுபடி

  1. vinothkumar says:

    மிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் முகவரி (அ) தொடர்பு எண் கொடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *