ஆந்திர நாவல்பழம் நல்ல லாபம்!

மருத்துவ குணமுள்ள ஆந்திர நாவல்பழம் திண்டுக்கல்லில் கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது.திண்டுக்கல்லில் மருத்துவ குணமுள்ள ஆந்திர நாவல்பழம் விற்பனைக்கு வந்துள்ளது. சர்க்கரை நோய்க்கு நாவல்பழமும், அதன் விதைகளும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இதனால், நாவல் பழத்தை சர்க்கரை நோயாளிகள் விரும்பி உண்கின்றனர்.

ஏக்கருக்கு 40 மரக்கன்றுகளும், எக்டேருக்கு 100 கன்றுகளும் நடலாம். ஐந்தாண்டு பயிர்.நான்கு ஆண்டுகளில் சாகுபடிக்கு வந்துவிடும். மா மரம் போலவே, அடர்த்தியாக வளரும்.ஆந்திராவிலுள்ள ரேணிகுண்டா, குண்டூர் பகுதிகளிலிருந்து அதிகமான நாவல்பழம் தமிழகத்திற்கு விற்பனைக்கு வருகிறது. தினமும் 4.3 டன் நாவல்பழம் திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வருகிறது.

தொடர்ச்சியாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் உள்ளதால், விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது, கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிஷோர்குமார் கூறியதாவது:

அடர்ந்த வனத்திலுள்ள காடுகளில் சேகரிக்கப்பட்ட நாவல் பழங்கள் தமிழகத்தில் குறைந்தளவே விற்பனைக்கு வருகிறது. ஆனால், ஆந்திராவில் ‘சீசன்’ துவங்கியுள்ளதால் அதிகளவில் சதைப் பற்றுள்ள நாவல்பழம் விற்பனைக்கு வந்துள்ளன. சுண்ணாம்பு சத்தும், நார் சத்தும் நிறைந்துள்ளதால் வளர் இளம் பெண்கள், சர்க்கரை நோயால் அவதியுறுவோர் சாப்பிடலாம், என்றார். நாவல்பழத்தை தனிப்பயிராக பயிரிட விவசாயிகள் விரும்புகின்றனர். இதனால், விதையில்லா நாவல் சாகுபடியை ஊக்குவிக்க முடிவு செய்தோம். அதன்படி, நாவல் ஒட்டுக்கன்றுகளை தயார் செய்து வளர்த்துள்ளோம். விவசாயிகள் கன்றுகளை பெற அணுகலாம். அனைத்து அரசு உதவிகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். விலை லாபகரமாக கிடைப்பதால் விவசாயிகள் தயக்கமின்றி பயிரிடலாம், என்றார்.

மேலும் விபரங்களுக்கு 09442106453 தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஆந்திர நாவல்பழம் நல்ல லாபம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *