நெல்வயலில் அசோலா – அதிக மகசூல்

நெல் வயலில் அசோலாவை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • அசோலா என்பது தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது,
  • மேலும் கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுகிறது.
  • நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும்.
  • அசோலாவை மண்ணில் கலந்து மக்கும் பொழுது சிறந்த உரமாக பயன்படும். மற்ற தாவரங்கள் அனைத்திற்கும் உரமாக பயன்படுத்தலாம்.
  • நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
  • நெல்வயல்களில் இந்த அசோலாவை தூவிவிடுவதன் மூலம் 10 நாட்களில் வயல் முழுவதும் பரவி வளர்ந்துவிடும்.
  • நாற்று நடவு செய்த 7ம் நாள் வயலில் அசோலாவை 5 கிலோ தூவ வேண்டும்.
  • இதற்கு அளவு கிடையாது. பயிர்களுக்கு இடைவெளியில் கிடைக்கும் காற்று, சூரிய ஒளியை பயன்படுத்திக்  கொண்டு அசோலா வேகமாக வளரும்.
  • நிலத்தில் பச்சைப் போர்வை போர்த்தியது போல, நிலம் முழுவதும் அசோலா படர்ந்து விடும். 20ம் நாளில் இருந்து ஒரு ஏக்கரில் தினமும் 50 முதல் 100 கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம்.
  • நிலம் முழுவதும் படர்ந்து விடுவதால், களை கட்டுப்படுகிறது. சாதாரணமாக 15 தூர்கள் வெடிக்கும் நிலத்தில், 40 தூர்கள் வரை வெடிக்கும். இதன் காரணமாக வழக்கமான மகசூலைவிட 10% முதல் 20% கூடுதல் மகசூல் கிடைக்கும்.
  • இதேபோல் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% அளவுக்கு தீவனச்செலவு குறையும்.
  • கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும்.
  • புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்து நாமும் சாப்பிடலாம்.
  • ஆகையால், ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் அசோலா வளர்த்தால், வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது. மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை. பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.
  • அசோலாவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரமாக விளங்குகிறது.
  • மேலும் தாது உப்புக்கள் 10% முதல் 15% வரையும் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்), வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களும் இதில் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அசோலாவின் பயன்பாடுகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
  • அசோலாவை நெல் வயலில் வளர்க்கும் போது, நீர் ஆவியாவது குறைகிறது. அசோலா,  காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையைச் செய்வதால், ரசாயன  முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு 30 சதவிகிதத்துக்கும் மேல் உரச் செலவு  குறைகிறது.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “நெல்வயலில் அசோலா – அதிக மகசூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *