பயறு சாகுபடிக்கு பாஸ்போ பாக்டீரியா

நிலத்தில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைப்பதன் மூலம் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மணிச்சத்தாகவும் மாற்றப் படுகிறது.

பேசில்லஸ் மெகாதீசியம், பேசில்லஸ் பாலிமிக்ஸா, சூடோமோனாஸ், ஸ்ட்ரையேட்டா, மைக்ரோகாக்கஸ் ஸ்ட்ரெப்டோமைசின் என்னும் பாக்டீரியாக்கள் மண்ணிலுள்ள முக்கியமான பாஸ்போ பாக்டீரியாக்களாகும்.

பயறுவகைப் பயிர்களின் தழைச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் அவற்றின் வேர்முடிச்சுகளில் உள்ள “ரைசோபியம்’ என்னும் நுண்ணுயிர் பெரும் பங்கு வகிக்கின்றது.

அதுபோல் அவற்றின் மணிச் சத்து தேவையைப் பூர்த்தி செய்ய நாம் ரசாயன உரங் களை இடுவது மட்டுமல்லாமல் அப்படி இடப்பட்ட மணிச்சத்து மண்ணில் கரையாத நிலையில் நிலைபெற்று வீணாவதைத் தடுக்க பாஸ்போ பாக்டீரியாவை நுண்ணுயிர் உரமாக இடுவது சாலச்சிறந்தது.

பயன் படுத்தும் முறை

  • ஒரு எக்டருக்குத் தேவையான 3 பைகள் ரைசோபியத்தை (600 கிராம்) 3 பைகள் பாஸ்போ பாக்டீரியாவுடன் 600 மில்லி அரிசிக்கஞ்சியுடன் கலந்து ஒரு கூழ் போன்ற கரைசலாக்கிக் கொள்ள வேண்டும்.
  • இந்தக் கரைசலை நன்கு சுத்தப்படுத்தப் பட்ட விதையுடன் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.
  • இதனால் ஒவ்வொரு விதையுடன் கருப்பு பூச்சு போன்ற அடைப்பு தெரியும்.
  • பொதுவாக வாடல், வேரழுகல் நோயைக் கட்டுப் படுத்துவதற்காக டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • சூடோமோனாஸ் புளூரசன்ஸ் உடன் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதையை நேர்த்தி செய்யலாம்.
  • இவ்வாறு டிரைக்கோடெர்மா அல்லது சூடோமோனாஸ் ஆகியவற்றுடன் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவைச் சேர்த்து விதைநேர்த்தி செய்யலாம்.
  • ஆனால் ரசாயன பூஞ்சாண கொல்லிகளான திரம் அல்லது கார்பன்டசிம் பயன்படுத்தும்பொழுது அவற்றுடன் விதைநேர்த்தி செய்த 24 மணி நேரம் கழித்து பின் உயிர் உரத்துடன் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • பின்னர் விதைகளை சாக்கின்மீது நன்கு பரப்பி, நிழலில் சுமார் 30 நிமிடங்கள் உலர்த்த வேண்டும்.
  • இவ்வாறு உலர்த்தப்பட்ட விதைகளை உடனடியாக விதைப்பு செய்துவிடலாம்.

பயன்கள்:

  • இது அங்கக அமிலங்களைக் கரைத்தும் நொதிகளைச் சுரந்தும் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்து பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கிறது.
  • மண்ணில் மணிச்சத்து நிலைபெறுவதைத் தடுக்கிறது. மண்ணில் இடப்படும் மணிச்சத்தின் உரப்பயன் பாட்டுத் திறனும் அதிகரிக்கிறது.
  • நீரில் கரையாத மணிச்சத்து உரத்தை பயிர்களுக்கு எளிதில் கிடைக்குமாறு மாற்றித்தருகிறது.
  • கதிர்களில் மணிகள் செழித்துவளர உதவுகிறது. அதனால் 10 முதல் 20 சதம் கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது.
  • பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து உர அளவில் 15 முதல் 20 சதம் வரை குறைக்கலாம்.

(தகவல்: கி.க.அனிதா, பெ.பாண்டியராஜன், வே.ஜெயபால், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நவலூர் குட்டப்பட்டு, திருச்சி-620 009. அலைபேசி எண்: 09944622422)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *