நாட்டுக்கோழி பண்ணையாளருக்கு மாதம் தோறும் இலவச பயிற்சி

நாட்டுக்கோழி பண்ணையாளருக்கு, மாதம்தோறும் இலவச பயிற்சி வழங்கப்படும் என, கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் துரைசாமி தெரிவித்தார்.

சேலத்தில், கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி, ஆராய்ச்சி மையம், சுகுணா நிறுவனம் சார்பில் நாட்டுக் கோழி பண்ணையாளருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

ஆராய்ச்சி மைய தலைவர் துரைசாமி பேசுகையில், “”சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 300 நாட்டுக்கோழி பண்ணையாளர்கள் உள்ளனர். இவர்கள், நேரடியாக வியாபாரிகளுக்கு கோழிகளை விற்க வேண்டும். அப்போதுதான் லாபம் கிடைக்கும். கடைகளில், ஒரு கிலோ கோழி, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே, பண்ணையில் 120 ரூபாய்க்கு கிடைக்கும்.

கோழிக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசியும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குடற்புழு நீக்குவதும் அவசியம்.

இதுகுறித்த இலவச பயிற்சி மாதம்தோறும் ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படுகிறது.

இதற்கு, 04272440408  என்ற ஃபோன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *