நேரடி புளி விற்பனையில் விவசாயிகளுக்கு ஆதாயம்

திண்டுக்கல்லில், ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புளிச்சந்தை துவங்கியது.

வியாபாரிகள், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்தனர்.

large_1363203126

 

 

 

 

 

  • தமிழகத்தில், புளி விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டத்தில், திண்டுக்கல்லும் ஒன்று.
  • மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், ரெட்டியார்சத்திரம், வடமதுரை ஆகிய ஊர்களில், அதிக எண்ணிக்கையில், புளிய மரங்கள் உள்ளன.
  • திண்டுக்கல்லில் ஆண்டுக்கு, ஒரு முறை கூடும் புளிச்சந்தை, திங்கட்கிழமை துவங்கியது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இச்சந்தை கூடும்.
  • இது, ஜூலை மாதம் வரை நீடிக்கும்.
  • கொட்டையுடன் கூடிய புளி கிலோ, 30 ரூபாய்க்கும், கொட்டை எடுத்த புளி கிலோ, 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
  • ராமையன்பட்டி விவசாயி ஸ்டீபன் கூறுகையில், “ஆண்டுதோறும், 5 மாதங்கள் நடக்கும் புளிச்சந்தையில், விவசாயிகள் நேரடியாக வந்து விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள், இடைத்தரகர்கள் இல்லாததால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. வரத்து அதிகம் என்பதால், விலையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *