புளியில் மேல் ஓடு பிரிக்கும் இயந்திரம்

அறுவடை செய்ய பட்ட புளியில் 25-30% வரை மேல் ஓடு இருக்கும்,
புளியை சமையல் செய்து சாப்பிட இந்த ஓடை எடுக்க வேண்டும். மேல் ஓடை எடுக்கும் வேலயை இப்போது மனிதர்கள் தான் செய்கின்றனர்.
அறுவடை செய்த பின் புளியை வெயிலில் காய வெய்து, அதன் பின் குச்சிகளால் குத்தி மேல் ஓட்டை எடுக்கின்றனர்.
ஏற்கனவே வேலை ஆட்கள் பற்றாக்குறை ஆட்டி வைக்கும் போது இந்த வேலையை செய்ய வருபவர்கள் குறைந்து வருகின்றனர்.

இந்த பிரச்னையை தீர்க்க தமிழ் நாடு வேளாண்மை பொறியியல் மையம் ஒரு இயந்திரத்தை அறிமுகம் செய்து உள்ளது. 1hp மோட்டார் மூலம் வேலை செய்யும். 2.5 கிலோ வரை மேல் ஓட்டை ஒரே தடவையில் எடுக்கும். ஒரு மணியில் கிலோ 100kg புளியை 92% இயக்கு திறன் உடன் பிரித்து எடுத்தது. இந்த இயந்திரத்தின் விலை Rs 9800.
மேலும் விவரம் வேண்டுவோர் deancaekum@tnau.ac.in என்ற மின் அஞ்சலையோ   04313202300   என்ற தொலை பேசியையோ தொடர்பு கொள்ளலாம்.

T.Pandiarajan & A. Tajuddin

Agricultural Engineering College andResearch Institute, Tamil Nadu Agricultural UniversityKumulur,Tiruchi
நன்றி: ஹிந்து (ஆங்கிலத்தில்)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *