நெல் குருத்துப்பூச்சியை வழிமுறைகள் குறித்து கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்:
- கார்நெல் சாகுபடி செய்துள்ள ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், சிவசைலம் போன்ற பகுதிகளில் நெல் பயிர் கதிர் வரும் தருவாயில் உள்ளது.
- நெல் பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல் தற்போது கதிர் வரும் பருவத்தில் உள்ள பயிர்களில் ஒன்று முதல் 2 சதம் வரை பாதிப்பு தென்படுகிறது.
- நெல் கதிர் பருவத்தில் குருத்துப்பூச்சி தாக்குதல் 2 சத வெண் கதிர்களுக்கு மேல் இருந்தால் பொருளாதார சேத நிலையாகும்.
- குருத்துப்பூச்சி தாக்கிய பயிரில் நெல் கதிர்கள் வெண்கதிராக மாறும். அதை கையினால் இழுத்தால் கையில் வந்துவிடும். அதில் குருத்துப்பூச்சி கதிரின் தண்டினை துண்டித்திருப்பது தெரியும்.
- எனவே இக்குருத்துப்பூச்சி தாக்குதல் மேலும் பரவ வாய்ப்புள்ளதால் விவசாயிகள் புரொப்பெனோபாஸ் 50 சதம் ஏக்கருக்கு 400 மிலி, இன்டாசோகார்ப் 14.50 சதம் ஏக்கருக்கு 80 மிலி, கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதம் ஏக்கருக்கு 200 கிராம் என்ற மூன்று மருந்தில் ஏதேனும் ஒன்றுடன் ஒட்டும் திரவங்களான சாண்டோவிட் அல்லது பைட்டோவிட் அல்லது லிங்காவிட் ஏதேனும் ஒன்றினை ஏக்கருக்கு 100 மிலி வீதம் கலந்து சீராக தெளிக்கவும்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “நெல் குருத்துப்பூச்சியை கட்டுபடுத்தும் வழிமுறைகள்”