பயிரை பாதுகாக்க கூடிய வேம்பின் பயன்கள்

வேப்ப மரத்தின் பயன்களை பார்ப்போமா?

சுற்று சூழல் பாதிப்படையாது, பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தும் , நூற்புழுக்களை கட்டுப்படுத்தும், அந்துப்பூச்சிகளை மலடாக்கும், முட்டைகளை பொறிக்க விடாமல் தடைசெய்யும், வேம்பின் வாசனையின் மூலம் பூச்சிகளை வரவிடாமல் செய்யும்

கசப்புத் தன்மை இருப்பதால் பூச்சிகளை உண்ணவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது பூச்சிகள் சாப்பிடாலும் அவற்றை சீரணிக்க விடாமல் குமட்டச் செய்யும் ஆற்றல் உள்ளது புழுக்களை தோலுரிக்க விடாமல் தடுக்கும், புழுக்கள் இனவிருத்தி செய்வதை தடுக்கும் கூட்டுப்புழு மற்றும் புழுவின் வளர்ச்சியை தடுக்கும், நன்மை செய்யும் பூச்சிகளை பாதிக்காது

வேப்பங் கொட்டை கரைசல் தயாரித்தல்

ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டை தேவைப்படும் அவற்றை இடித்து நன்கு தூளாக்கி அவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுதும் ஊறவைக்க வேண்டும். பின்பு அவற்றை வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் கலந்து ஒட்டு பசை சேர்த்து,10 லிட்டர் பசுமாட்டுக் கோமியம் சேர்த்து கலந்து தெளிக்கவும்.

கட்டுப்படும் நோய் : பாக்டீரியா நோய்கள்

நெல் பாக்டிரியா கருகல் நோய்
இலையுறைக் கருகல் நோய்
நெல் துங்ரோ வைரஸ் நோய் (குட்டைப்புல் நோய்)
தக்காளி இலைக்கருகல் நோய்,சாம்பல் நோய்
மிளகாய் இலை சுருட்டை நோய்

வேப்பம் புண்ணாக்கு சாறு
2 கிலோ வேப்பம் புண்ணாக்கை 10 லிட்டர் நீரில் கலந்து 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கலவையை வடிகட்டி 100 மில்லி சோப்புக் கரைசலுடன் 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கர் பயிரில் தெளிக்கலாம்.

கட்டுப்படும் நோய்கள்
எலுமிச்சை சொறி நோய்
தக்காளி இலைப்புள்ளிநோய்
நெல் தோகை அழுகல் நோய்
மிளகாய் பழ அழுகல் நோய்

அனைத்து இடங்களிலும் வேம்பு வளர்க்கலாம்

வேம்பிலிருந்து பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க நாம வயல் ஓரங்கள், தரிசு நிலங்களில் மற்ற இடங்களலும் வேம்பு வளர்த்து பயனபடுத்தலாம் இப்பொழுது நடவு செய்தால் தண்ணீர் ஊற்றும் செலவு மிச்சம் எந்தவித பழுதும் வராமல் முளைத்துவிடும்

ஆகவே நாம் இப்பவே வேப்பமரம் நடவு செய்வோம் வேப்ப மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 50 கிலோ வேப்பங் கொட்டை கிடைக்கிறது அதில் 50 சதவீதம் வேப்ப எண்ணெய் கிடைக்கும் அனைத்து வகை பூச்சி, நோய்களையும் கட்டுப்படுத்தும், வேம்பில் கட்டுப்படுத்தப்படும் பூச்சிகளின் எண்ணிக்கை 123…  வேப்பமரத்தை இப்பொழுதே நடவு செய்வோம்

நன்றி: RSGA கன்னிவாடி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *