மணிலா அதிக மகசூலுக்கு "டானிக்"

அதிக மகசூல் பெற இலை வழி ஊட்டச்சத்து கரைசல் மணிலா சாகுபடியில் தெளித்து விவசாயிகள் பயன் பெறலாம். மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பு:

  • மணிலா சாகுபடியில் அதிக மகசூல் பெற இலை வழி ஊட்டசத்து கரைசலை தெளிக்கலாம்.
  • செடிகளில் உள்ள காய்களின் எண்ணிக்கை, பருப்புகளில் திரட்சியுமே மகசூலை நிர்ணயிக்கின்றன.
  • இவை அதிகரித்து கூடுதல் மகசூல் பெற கரைசல் தெளிப்பிற்கு முதல் நாள் இரவு ஒரு கிலோ டிஏபி., உரத்தை 15 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 200 கிராம் போரக்ஸ் பவுடர் , 400 கிராம் அமோனியம் சல்பேட் உரத்தை ஒரு லிட்டர் சுடு நீரில் ஊற வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலை இரண்டு கரைசலில் உள்ள தெளிவு நீரை மட்டும் எடுத்து வடிகட்டி 185 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.
  • இந்த கரைசலை தெளிக்கும் முன் 175 மில்லி பிலோனோபிக்ஸ் பயிர் வளர்ச்சி ஊக்கியை தெளிவுடன் கலக்க வேண்டும்.
  • இந்த ஊட்டச் சத்து கரைசலை ஒரு ஏக்கருக்கு கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.
  • தெளிப்பு செய்யும் போது வயலில் போதிய ஈரம் இருக்க வேண்டும்.
  • ஒரு டேங்கிற்கு 2 மி.லி.,டீப்பால் எனும் திரவத்தை கலக்க வேண்டும்.
  • மணிலா விதைத்து 25வது நாள் முதல் முறையும், 35 வது நாளில் இரண்டாவதாகவும், 45 ம் நாளில் மூன்றாவதாகவும் டானிக் தெளிக்க வேண்டும்.
  • மேல்மலையனூர், அவலூர்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் ஊட்டச்சத்து கரைசல் தயாரிக்க தேவையான இடு பொருட்கள் கிட்டு, ஐசோபாம் எண்ணெய் வித்து திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது, விவசாயிகள் வாங்கி பயனடையலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *