மண் வளத்தின் முக்கியத்துவம்

ஒரு நாட்டின் வளம் மண் வளமே ஆகும். இதில் விளையும் பயிர்களும், அதனை உண்ணும் மிருகங்களும் இல்லாவிட்டால் அந்த நாட்டின் வளம் என்ன ஆகும் என்பதை பார்க்க சஹாரா பாலைவனம் உள்ள மத்திய ஆப்ரிக்க நாடுகளை பார்த்தலே தெரியும்.

நம் நாடு ஒரு காலத்தில் மண் வளத்தில் முன்னோடியாக இருந்தது. தொழிற்படுத்த விவசாயம், காடுகள் அழிப்பு, வறட்சி உள்ள இடங்களில் மரங்கள் அழிப்பு போன்றவை இந்தியாவின் மண் வளம் குறைய காரணம் ஆக இருக்கிறது.

2016 ஆகஸ்டில் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் 30% நிலம் பாலைவனமாக ஆகும் சாத்தியம் உள்ளதாக கூறியுள்ளது. ராஜஸ்தான் மட்டும் இல்லாமல் ஹரியானா, ஜார்கண்ட், குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்கள் இவற்றில் அடங்கும். மலை மாநிலங்களும் இவற்றில் அடங்கும்!

ஏற்கனவே 2014 வெளியான ஆராய்ச்சி அறிக்கையில், இந்தியாவில் 45% நிலம் பலவிதமான பிரச்சனைகளை எதிர் கொள்வது தெரிந்துள்ளது. நீர் தேக்கம், நீர் அரிப்பு, காற்றில் அரிப்பு, உப்பு நிலம், உவர் நிலம், ரசாயன தொழிற்சாலைகள், தோல் பதனிடும் ஆலைகளின் கழிவுகள் என்று பல விதம்.

மணல் கொள்ளையால் ஆறுகள் இருக்கும் மணலை அடித்து கொண்டு சென்று அணைகளில் சேர்கின்றன. இதனால் 60% வரை அணைகளின் ஸ்டோரேஜ் குறைகிறது.

 

உலகின் இரண்டாவது ஜனத்தொகை கொண்ட நம் நாட்டின் மண் வளம் நேரடியாக உணவு பாதுகாப்பு தொடர்பு கொண்டது. அதிகம் ரசாயன உரம், பூச்சி கொல்லி பயன் படுதலால், மண்ணில் இயற்கை தாதுப்பொருட்கள், மண் புழுக்கள் எல்லாம் குறைந்து விட்டன. தேவைக்கு அதிகமாக உரியா உரம் போட்டு மண் வளம் பாதிக்க பட்டுவிட்டது. நிலத்தடி நீரும் மாசு பட்டு விட்டது.

இதில் எல்லாம் இருந்து விடுதலை, இயற்கை விவசாயமே!

டிசம்பர் 5 உலக மண் தினம்

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *