கேரளா அரசின் முன்னேற்ற முடிவு

மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் பயிர்களையும், பன்னாட்டு நிறுவனங்களும் (Monsanto, Bayer) அவற்றின் இந்திய நிறுவனங்களும் (Mahyco) இந்தியாவில் கொண்டு வர பகீரதன் முயற்சி செய்து வருகின்றன.

உலகத்திலேயே முதல் முறையாக கத்திரி செடியில் பக்டீரியா DNA சேர்த்து உருவாக்க பட்ட BT brinjal சிறிது காலம் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. IPL, Lavasa போன்றவற்றில் மட்டுமே நேரம் செலுத்தும் நம் அருமை விவசாய   மந்திரி பவர் மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதிற்கு முழு ஆதரவு.

இந்த நேரத்தில், கேரளா அரசாங்கம், கேரளா மாநிலத்தில் மரபணு மாற்றப்பட்டபயிர்களை அனுமதிக்க மாட்டோம் (Kerala is a GM-Free state) என்று முடிவு செய்து அறிவித்து இருப்பது மிகவும் தைரியமான செயலாகும்.

பன்னாட்டு நிறுவனகளின் பண பலம், நம் நாட்டு மந்திரிகளின் உதவி எல்லாவற்றையும் எதிர்த்து இந்த முடிவு எடுத்ததற்கு கேரளா அரசாங்கத்திற்கு நம்முடைய சபாஷ்!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *