மோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்

UPA அரசாங்கத்தில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் Knowledge Initiative on Agriculture என்று ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டன.
இந்த திட்டத்தில் மொன்சாண்டோ, வால்மார்ட் போன்ற  மிக பெரிய நிறுவனங்கள் உறுப்பினர்கள்.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்  இந்தியாவில் மரபணு மாற்ற பட்ட பயிர்களை கொண்டு வருவதே.

RTI சட்டத்தின் மூலம் இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றி தெரிந்ததில் மேலும் கவலை ஏற்படுகிறது. RTI மூலம் தெரிந்த உண்மைகள்:

– இந்த திட்டம் இந்தியாவின் 60% மக்கள் வாழ்வாதாரத்தை தொடும் விவசாயம் பற்றி இருந்தாலும் இதை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் எழுப்ப படவே இல்லை
– இந்தியாவின் 7000 வேளாண் பல்கலை விஞானிகள் அவர்களின் கண்டுபிடுப்புகளை மொன்சாண்டோ போன்ற நிறுவங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இலவசமாக.
– இப்படி இந்தியாவின் bioresources அமெரிகாவின் கம்பனிகளுக்கு கிடைத்தால் அவை அங்கே காப்புரிமை செய்யப்படும். கொஞ்ச வருடங்கள் முன்பு வேம்பு மரத்தை காப்புரிமை செய்ய பார்த்தார்கள். நல்ல வேளையாக இது தடுத்து நிறுத்த பட்டது. இதற்கு biopiracy என்று பெயர்,
அதாவது மூன்றாம் உலக ஏழை நாடுகளில் பரம்பரை பரம்பரையாக பயன் படுத்த பட்ட பொருட்களை காப்புரிமை செய்வது

இப்போது மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மீது மரபணு மாற்றபட்ட பயிர்கள் இந்தியாவில் கொண்டு வர நிறைய நெருக்கம் pressure கொடுப்பார் ஒபாமா.

இதை தாங்கும் சக்தி மோடிக்கு இருக்குமா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *