BT சச்சரவுகள் – 4

மரபணு மாற்றபடும் தொழிற் நுட்பத்தை (Bt, Genetically modified crops) ஆதரிப்பவர்கள் கூறும் ஒரு காரணம் இது: இந்தியாவின் ஜன தொகை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் உணவு வழங்க நாம் மரபணு மாற்றப்படும் விதைகளை பயன் படுத்த வேண்டும்

இந்த கருத்தை மறுத்து உள்ளார்கள், வெளி நாட்டை சேர்ந்த நிபுணர்கள்.

இந்த தொழிற் நுட்பத்தை பயன் படுத்தும் விவசாயிகளுக்கு அதிக ஈடுபொருட்கள் செலவு ஆகிறது. அதிகம் நீர் தேவை படுகிறது. புது விதமான பூச்சி தொல்லைக்கு ஆட்படுகின்றன  என்கிறார்கள் அவர்கள்

உலகத்தில் அதிக நாட்களாக மரபணு மாற்றப்படும் தொழிற் நுட்பம் இருக்கும் நாடான அமெரிக்காவில் தொழிற் நுட்பம் கொண்ட சோளம், பருத்தியில் மகசூலில் 1996 முதல் 2008 வரை ஆண்டுகளில் வெறும்
3% சதவீதமே அதிகரித்தது

மில்லேனியும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Millennium Institute, Washington) விஞானி டாக்டர் ஹான்ஸ் ஹீர்றேன் (Dr. Haans Herren) கூறும்போது இந்தியாவின் உணவு பாதுகாப்பு மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் வர சாத்தியம் இல்லை என்றார். நீர் பற்றாக்குறை, வறட்சி, நிலம் மாசுபடுதல் போன்றவை பெரிய பிரச்னைகள் என்றார்.

இந்த தொழிற்நுட்பம் உலகத்தில் பெரிய அளவில் அரை டசன் நாடுகளில் மட்டுமே உள்ளது என்றார் அவர்

புது டில்லியில் செப்டம்பர் 24, 25 தேதிகளில் நடந்த “Can GM Crops Meet India’s Food Security and Export Markets” என்ற
கருத்தரங்கு ஒன்றில் இவ்வாறு கூறினார். இந்த கருத்தரங்கில் பங்கு கொண்ட மற்ற விஞானிகள்:

  • Hans Herren, member of the United States National Academy of Sciences from Millennium Institute, Washington
  • Doug Gurian-Sherman, senior scientist, Union of Concerned Scientists, Washington
  • Walter Goldstein from Biodynamic Association of North America
  • Jack Heinemann, professor of Molecular Biology and Genetics, School of Biological Sciences, Centre for Integrated Research in Bio-safety, University of Canterbury Christchurch, New Zealand.

நன்றி: ஹிந்து நாளிதழ்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *