சாமந்தி பூ சாகு­ப­டி

பாலுார் அருகே, அதிக லாபம் தரும் சாமந்தி பூக்கள் சாகு­படி செய்­வதில், விவ­சா­யிகள் ஆர்­வத்­துடன் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

காட்­டாங்­கொ­ளத்துார் ஒன்­றி­யத்­திற்கு உட்­பட்ட பாலுார் ஊராட்­சியில், மேலச்­சேரி கிராமம் அமைந்­துள்­ளது. இங்கு, விவ­சா­யிகள் அதிகம் வசிப்­பதால், இப்­ப­கு­தியின் பிர­தான தொழி­லாக, விவ­சாயம் விளங்கி வரு­கிறது, இப்­ப­கு­தியில், உள்ள விவ­சா­யிகள் அதிக லாபம் தரும், மலர் சாகு­படி செய்­வதில் ஆர்­வத்­துடன் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.
இது­கு­றித்து, மேலச்­சே­ரியை சேர்ந்த சுப்பி­ர­மணி என்ற விவ­சாயி கூறி­ய­தா­வது:

 • மலர் சாகு­ப­டியில் அதிக லாபம் கிடைப்­பதால், எனக்கு சொந்­த­மான, 40 சென்ட் நிலத்தில், சாமந்தி பூ செடி­களை பயி­ரிட்­டுள்ளேன்.
 • இதற்­காக, நிலத்தை நன்கு உழுது, 5 டன் தொழு உரம் ஈட­வேண்டும்.
 • பின்னர், நன்கு பரா­ம­ரிக்­கப்­பட்ட நாற்­று­களை நடவு செய்ய வேண்டும்.
 • நாற்று விடு­வ­தற்­கான, சாமந்தி பூ விதை­களை, பெங்­களூர் பகு­தியில் இருந்து வாங்கி வரு­கின்றோம். ஒரு­விதை, 1.60 பைசா­விற்கு வாங்­கு­கின்றோம்.
 • சிலர், நாற்­று­களை வாங்­கியும் நடவு செய்­கின்­றனர். ஒரு­நாற்று, 2.60 பைசா­விற்கு விற்­பனை செய்­கின்­றனர்.
 • ஏக்­க­ருக்கு, 3,000 நாற்­று­களை நடவு செய்­யலாம்.
 • நாற்று நடவு செய்த பின், வாரம் ஒரு­முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
 • நடவு செய்த 40 நாட்­களில், அரும்­புகள் எடுக்கும்.
 • பின்னர், 2 நாட்­க­ளுக்கு ஒரு­முறை 60 கிலோ முதல் 80 கிலோ வரை­யி­லான சாமந்தி பூக்­களை அறு­வடை செய்­யலாம்.
 • வாரம் ஒரு­முறை, களை எடுக்க வேண்டும். இதற்­காக, 2,000 ரூபாய் செல­வாகும்.
 • வெயில் நாட்­களில், செடி­களில் அரும்­புகள் அதி­க­மாக காணப்­படும்.
 • அறு­வடை செய்­யப்­படும் பூக்­களை, ஒரு­கிலோ 20 முதல் 40 ரூபாய் வரை விற்­பனை செய்கிறேன்.
 • திரு­விழா மற்றும் விசேஷ நாட்­களில் கூடுதல் விலைக்கு விற்­ப­னை­யாகும்.மேலும், அனைத்து செல­வு­களும் போக, ஏக்­க­ருக்கு 40 ஆயிரம் ரூபாய் லாப­மாக கிடைக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *