மூலிகை பயிர் சாகுபடி: லாபம் தரும் விவசாயம்

வீட்டு தோட்டத்தில் வளரும் பலவித தாவரங்களுள் மூலிகை பயிர்களும் ஒன்று. நமது பாரம்பரிய மருத்துவத்தில் உதவிகரமாக விளங்கிய மூலிகை பயிர்கள் ஆங்கில மருத்துவ முறையிலும் பயன்பாட்டுக்கு உறுதுணையாக உள்ளன.

உலகளவில் இந்தியாவில் மட்டுமே 12 மெகா பயோடைவர்சிட்டி வகைகள் 2.4 சதவிகித பரப்பில் உள்ளது. கிட்டத்தட்ட 15,000 வகைகள் அபூர்வ மூலிகை பயிர்கள் நம் நாட்டில் மட்டும் உள்ளன. இந்தியாவில் 20 வகை அக்ரோ ஈக்காலஜிகல் மண்டலங்கள், 15 அக்ரோ கிளைமேட் மண்டலங்கள், 10 வெஜிடேட்டிவ் மண்டலங்கள் உள்ளன. ஏரக்குறைய 45,000 வகையான தாவர இனங்கள் 15 பயாட்டிக் மண்டலங்களில் வளர்க்கப்படுகின்றன.

தற்கால மதிப்பீட்டின் 6,198 வகை மூலிகை பயிர்கள் இமாலயம், கடற்கரை, பாலைவனம், மழை பொழியும் வனங்களிலும் வளர்கின்றன. நவீன மருத்துவத்தில் 25 சதவிகிதம் மூலிகை பயிர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மருந்துகள் தான் ஆங்கில மருந்து தயாரிப்புக்கு உதவுகின்றன. இந்திய மருத்துவத்தில் 2,400 தாவர வகைகள் பயன்படுகின்றன. குறிப்பாக ஆயுர் வேதத்தில் 1,587 மூலிகை பயிர்கள், சித்த மருத்துவத்தில் 1,128 வகைகளும், யுனானி பிரிவில் 503 தாவரங்களும், சோவாரிக்பா எனும் மருத்துவத்தில் 253 மூலிகை பயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நவீன ஆராய்ச்சிகளின்படி உள்நாடு, வெளிநாடு என யார் வேண்டுமானாலும் தேவையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நமது மருந்துக்கு உதவும் தாவரம் மற்றும் தாவரப் பொருட்களை விற்பனை செய்யலாம்.

இதற்கு இலவச செயலி ‘E – CHARAK‘  என்ற பெயரில் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. உங்கள் பகுதியில் மூலிகை வளர்க்க விரும்புவோர்  9842007125 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

– டாக்டர் பா.இளங்கோவன்
உதவி இயக்குனர்
தோட்டக்கலை, உடுமலை.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *