மாம்பழம் பழுக்க ரசாயன கல் பயன்பாடு தவிர்ப்பது எப்படி

மாம்பழம் விற்பனை துவங்கிய நிலையில் பழங்களை பழுக்க வியாபாரிகள் ரசாயனகற்களை பயன்படுத்துவதை சுகாதார துறையினர் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.

  • மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பல இடங்களில் வீசிய சூறாவளி காற்றால் மாங்காய்கள் உதிர்ந்து வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் சூறாவளி காற்று அதிகரிக்கும் என்பதால் மாங்காய்களை முன்கூட்டியே அறுவடை செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • கடந்த காலத்தில் மாங்காய்கள் மரங்களில் பழுத்த பின்னரே தோப்புகளில் இருந்து மா பறிக்கப்படும். இவ்வாறு பறித்த மாங்காய்களை வியாபாரிகள் பெரிய இருட்டறையில் வைக்கோல் போட்டு புகை மூட்டி பழுக்கவைப்பார்கள்.
  • இருட்டறையில் வைக்கோல் கொண்டு பழுக்க வைக்கும் போது மாங்காய்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் பழுப்பதில்லை. மேலும், பறிக்கப்பட்ட காய்கள் பழுக்க குறைந்தது ஒரு வார காலத்திற்கு காத்திருக்வேண்டும்.
  • வைக்கோல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்கள் சுவை சுமாராக இருந்தாலும் இவ்வகை பழங்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிடும் போது எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்.
  • தற்போது, வியாபாரிகள் மாங்காய்களை சீராக பழுக்க வைக்கவும், இனிப்பு தன்மை அதிகம் கிடைக்க வசதியாக “கார்ஃபைட்’ என்ற ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
  • மாங்காய்கள் ரசாயனக்கல் கொண்டு பழுக்க வைக்கும் போது குறைந்த நாட்களில் பழமாகும் என்பதால் இம்முறையை அதிக வியாபாரிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
  • மாம்பழம் பழுக்க இந்த முறை எளிய வழியாக இருந்தாலும் ரசாயனக்கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை பொதுமக்கள் சாப்பிடும் போது வயிற்று வலி, வயிற்று போக்கு ஆகிய நோய்கள் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்து வருகின்றனர்.
  • குறிப்பாக சிறுவர்கள் ரசாயன கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடுவதால் வயிறு சம்மந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

மாம்பழ அறுவடை டிப்ஸ் பற்றி பசுமை விகடனில் வந்த செய்திகளை இங்கே படியுங்கள்.

“கால்சியம் கார்பைட்” போன்றவற்றை மாம்பழங்களை பழுக்க வைக்க பயன் படுத்த வேண்டாம். ஆவாரம் பூக்களையும், இலைகளையும் மாம்பழத்தோடு போட்டு வைத்தால் பழங்கள் சீக்கிரமாக பழுப்பது மட்டும் இன்றி, தங்க நிறத்திலும் நல்ல வாசனை உடனும் இருக்கும்!
நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மாம்பழம் பழுக்க ரசாயன கல் பயன்பாடு தவிர்ப்பது எப்படி

  1. james.r says:

    vanakam, unkali nitha velakathin mulam nanku purinthu kollamudikirathu nitha vazhi muraikalai anaivarum payanpadutha vendum ana virupukiren. nanri!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *