லாபம் தரும் மா

அதிக மகசூல் தரும் மா வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

ரகங்கள்:

  • நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதின், காலேபாடு, ருமானி, மல்கோவா, பையூர் -1, அல்போசா சிந்து.

வீரிய ஓட்டு ரகங்கள்:

  • பெரியகுளம் -1, மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து சேலம், பெங்களூரா.

 மண்ணும், தட்பவெப்ப நிலையும்:

  • நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம். மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும் மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும். மா நட ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும்.

 நிலம் தயாரித்தல்:

  • நிலத்தை நன்கு உழது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் வெட்டி, பின்னர் குழி ஓன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.

 ஓட்டுச் செடிகளை நடுதல்

  • ஓட்டுச் செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும் செடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளி விட வேண்டும். அடர் நடவு முறையினை (10 ஷ் 5 மீ) அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களில் பின்பற்றலாம்.
    செடிகள், நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
  •  மேலும் பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண்டும்.
  •  உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப் பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு, பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
  • ஒரு ஹெக்டருக்கு இட வேண்டிய சத்துக்கள் (கிலோ ஒரு மரத்துக்கு) முதல் வருடத்துக்கு தழை 0.2, மணி 0.2, சாம்பல் 0.3, 6 வருடங்களுக்குப் பிறகு தழை 1, மணி 1, சாம்பல் 1.5. காம்ப்ளக்ஸ் 10:26:26 அளவிலும் இட வேண்டும்.
  • யூரியா இட வேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்துக்கு) முதலாம் ஆண்டும், வருடந்தோறும் காம்ப்ளக்ஸ் 12, யூரியா 0.2, 6 வருடங்களுக்குப் பிறகு காம்ப்ளக்ஸ் 4.0, யூரியா 1.3, பொட்டாஷ் 0.840.
  •  வருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும். பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க என். ஏ.ஏ. என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு மில்லி மருந்தை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சத யூரியா கரைசல் அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.

பூச்சிகள்:

  •  அசுவினி செதில் பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரும்பூஞ்சாண் நோய் போன்றவற்றுக்கும் அதிகாரிகள் பரிந்துரைகளின்படி மருந்துகள் தெளிக்க வேண்டும்.

அறுவடைக் காலம்:

  • மார்ச் முதல் ஜூன் வரை அறுவடை செய்யலாம்.
  • ரகத்துக்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் வேறுபடும்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *