இன்று உலக யானை தினம்.

உலகத்தில் 2 வகை யானைகள் உள்ளன: இந்தியா, தாய்லாந்து பர்மா போன்ற இடங்களில் உள்ள இந்திய யானை. இவற்றில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்ட. 20 மாதம் குட்டியை தாங்கி பெற்று எடுக்கிறது யானை. யானை பிறக்கும்போது, அம்மாவை சுற்றி பெண் யானைகள் நின்று கொண்டு யாரும் பார்க்காமல் மறைக்கும் குணம் உண்டு. அம்மா, பெரியம்மா என்று அவற்றுக்கும் உறவு நினைவுகள் உண்டாம்!

ஆப்ரிக்காவில் உள்ள ஆப்ரிக்க யானை. இதன் காது பெரிதாக இருக்கும். ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் உண்டு,

மனிதர்களை போன்று பல உணர்ச்சிகளை கொண்ட, குடும்பத்தோடு வாழும் குணம் கொண்ட, அதிக விளையாட்டு, புத்திசாலியான யானைகளின் இடங்களில் இப்போது சாலைகளும்,  மனிதர்களின் நடமாட்டமும் அதிகரிப்பதால் இவற்றின் இயல்பு தடை பெறுகிறது. பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு படை எடுக்கிறது.

ஆப்ரிக்காவில் தந்தத்திற்காக தினமும் 50 யானைகள் கொல்ல படுகின்றன. இந்தியாவில் நல்ல வேளை நிலைமை அவ்வளவு மோசம் இல்லை..

இருந்தாலும், நம் தலைமுறை சரியான முடிவுகளை எடுக்காவிட்டால் நம் சந்ததியினர் யானைகளை படங்களில்தான் பார்க்க வேண்டி இருக்கும்…

இந்த Gentle Giants பற்றிய புகைப்பட தொகுப்பு

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இன்று உலக யானை தினம்.

  1. சிவஷண்முகராஜன்.ஹ says:

    Vaalthukkal வாழ்த்துக்கள் நம் முன்னோர்கள் போல் நாமும் நம் சந்ததிக்கு விட்டு செல்ல வேண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் பாதுகாத்து வனவிலங்கு மதிப்பு அளிப்போம் என்று உறுதி மொழி எடுக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *