லாபம் தரும் இலை வாழை சாகுபடி

இலை பயன்பாட்டுக்காக வாழை சாகுபடியும் அதிகரித்து வருகிறது.

உடுமலை பகுதிகளில், தென்னை, நெல், கரும்பு, மக்காச்சோளம், சோளம் பல்வேறு தானிய பயிர்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

ஏழு குளம், அமராவதி மற்றும் ஒரு சில பகுதிகளில், இறவை பாசனத்தில், வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பல ரக பழங்களுக்கான வாழை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது, இலை அறுவடை செய்வதற்கான, வாழை ரகமும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.


இலை வாழைகள், திருச்சி, கரூர் உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டு, கோவை, திண்டுக்கல் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு வந்தது. தற்போது, உடுமலை சுற்றுப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு, இப்பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. நான்கரை மாதத்திலிருந்து, இரு நாளைக்கு ஒரு முறை இலை வாழை அறுவடை செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டு வரை சாகுபடி காலம் நீடிக்கிறது.

விவசாயிகள் கூறியதாவது:

  • வாழை ஓராண்டு சாகுபடியாகும்; பழத்தார்கள் அறுவடையுடன் முடிந்து விடும்;
  • பக்க கன்றுகள், களை வராமல் பராமரிக்க வேண்டும். தார் வந்ததும், முட்டுக்கொடுக்க வேண்டும். இதற்கு பக்க கன்றுகள் வரும் வரை லாபம் அதிகரிக்கும்.
  • நாட்டு காய் கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.நான்கரை மாதத்தில் அறுவடை துவங்கும். வியாபாரிகள் நேரடியாக வந்து, விலை பேசி ஒப்பந்த அடிப்படையில், அவர்களே இலைகளை அறுத்துக்கொள்கின்றனர்.
  • ஒரு கட்டுக்கு, 400 ரூபாய் வரை தருகின்றனர்.
  • சீசன் காலங்களில் விலை ஏறினாலும், வியாபாரிகளுக்கே லாபமாகும். அறுவடை செய்யும் இலைகள், கேரளா மற்றும் கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல் பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *