சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி 2013 அக். 23, 24-களில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருஙகிணைப்பாளர் பி. வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  • பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களான சின்ன வெங்காயம் மற்றும் எலுமிச்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பயிர்களில் பூச்சி, நோய் உள்ளிட்ட பல காரணிகளால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
  • இதைக் கருத்தில் கொண்டு, 2013 அக். 23-ம் தேதி சின்ன வெங்காய சாகுபடி நுட்பங்கள், 30-ம் தேதி எலுமிச்சை சாகுபடி நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது.
  • சிறிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை பயிர்களின் நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து காணொளிக் காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
  • பயிற்சியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகள் நேரடியாகவோ அல்லது 04328293251, 04328293592, 09790491566 ஆகிய எண்ணிலோ தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்து பயன் பெறலாம்.

நன்றி: தினமணி 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *